அந்நிய கிரகத்தில் புதிய சாதனை..!!

By Meganathan
|

நிலவில் கால் பதித்த இரண்டாவது மனிதர் என்ற பெருமையோடு தன்னை அறியாமல் மற்றொரு சாதனையையும் புரிந்திருக்கின்றார் விண்வெளி வீரரான புஸ் ஆல்ட்ரின். 1969 ஆம் ஆண்டு நிலவில் கால் பதிக்கும் முன் ஆல்ட்ரின் 1966 ஆம் ஆண்டு உலகின் முதல் விண்வெளி செல்பீயை எடுத்துள்ளார். இந்த செல்பீ கடைசி ஜெமினி மிஷன் என அழைக்கப்பட்ட ஜெமினி 12 மூலம் எடுக்கப்பட்டது.

உலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..!

இந்த செல்பீயோடு வேற்று கிரகங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு அழகான மற்றும் வித்தியாசமான செல்பீ புகைப்படங்களை நாசா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் உங்களை வியப்பில் ஆழ்த்தும் அழகான விண்வெளி செல்பீக்களின் புகைப்படங்களை பாருங்கள்..

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

முதல் செல்பீ

முதல் செல்பீ

1966 ஆம் ஆண்டு ஜெமினி 12 மிஷன் மூலம் எடுக்கப்பட்ட உலகின் முதல் விண்வெளி செல்பீ இது தான்.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்ஸியை சேர்ந்த அகி ஹோஷைடு இந்த செல்பீயை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி விண்வெளியில் எடுத்தார். இதில் அவரது முகத்தில் உலகம் தெரிகின்றது.

ரோபோட்

ரோபோட்

2012 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த செல்பீ க்யூரியோசிட்டி ரோவர் மூலம் எடுக்கப்பட்டது, இதனை நாசா அதிகாரப்பூர்மாக வெளியிட்டது.

க்யூரியோசிட்டி

க்யூரியோசிட்டி

க்யூரியோசிட்டி மூலம் எடுக்க முயன்ற முதல் செல்பீ இது தான்.

நாசா

நாசா

நாசா விண்வெளி வீரர் மற்றும் விமான பொறியாளரான டாம் மார்ஷ்பன் இந்த செல்பீ புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மே 13 ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு பதிவு செய்தார்.

மைக் ஃபோஸ்ஸம்

மைக் ஃபோஸ்ஸம்

2011 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி ஆறு மணி முப்பதி நிமிடங்கள் விண்வெளி நடை பயணத்தின் போது நாசாவின் விமான பொறியாளர் மைக் போஸ்ஸம் இந்த செல்பீயை எடுத்தார்.

ரோசெட்டா ஃபிலே லேன்டர்

ரோசெட்டா ஃபிலே லேன்டர்

செவ்வாய் கிரகம் பின்னணியில் இருக்க ரோசெட்டா ஃபிலே லேன்டர் இந்த செல்பீயை 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி எடுத்தது.

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளின் போது விண்வெளி வீரர் ஹெய்டிமேர் எம். ஸ்டெஃபன்ஷைன் - பைப்பர் இந்த செல்பீயை 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி எடுத்தார்.

சோவியட் வெனரா 13

சோவியட் வெனரா 13

1982 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வீனஸ் கிரகத்தில் தலையிறங்கிய சோவியட் வெனரா 13 விண்கலம் இரு கேமராக்களை கொண்டு இந்த புகைப்படங்களை எடுத்தது. சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் வரை இந்த விண்கலம் அந்த கிரகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்று தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

ஆதாரம் : சிஎன்என்

Best Mobiles in India

Read more about:
English summary
The best selfies from space. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X