அதிநவீன போர் விமானங்கள், மக்களை அச்தத்தில் ஆழ்த்தும் உலக நாடுகள்..!!

Written By:

உலக நாடுகளுக்குள் அமைதியை வலியுறுத்துவதாக ஐ.நா கூறி வந்தாலும் உலகின் சூப்பர் பவர் நாடுகள் இதை ஏற்று கொள்வதாக தெரியவில்லை என்றே கூற வேண்டும்.

அமைதியை வலியுறுத்துவதாக சில நாடுகள் கூறி வந்தாலும், அதிநவீன ஆயுதங்களை அந்நாடுகள் அமைதியாக வாங்கி குவித்து வருகின்றன என்பதே உண்மை. இங்கு உலக நாடுகள் வாங்கி வைத்திருக்கும் சில அதி நவீன போர் விமானங்களின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எஃப்/ஏ 18

எஃப்/ஏ 18

அமெரிக்கா வைத்திருக்கும் எஃப்/ஏ 18 சூப்பர் ஹார்னெட் ஜெட் விமானத்தில் 19*11 இன்ச் டச்-சென்சிட்டிவ் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃப்ராரெட் சர்ச் அன்டு ட்ராக் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் மூலம் இலக்குகளை ட்ராக் செய்வது மற்றும் ரேடார்களை முடக்குவது போன்றவைகளை மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெ 10

ஜெ 10

நேவிகேஷன் பாட், ஆக்சில்லரி ஃபூயலஸ் டேன்க், மீடியம் ரேன்ஜ் ஆக்டிவ் ரேடார் ஏவுகணை, இன்ஃப்ராரெட் ஏவுகணை, லேசர் கைடடு ஏவுகணை கொண்டிருக்கின்றது. பல தொழில்நுட்பங்களை கொண்டு இலக்குகளுக்கு ஏற்ப தாக்குதல்களை நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஃபேல்

ரஃபேல்

பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானமானது அதிநவீன ஏவியோனிக்ஸ் சிஸ்டம், மல்டி-மோடு ரேடார் ஜாம்-ரெசிஸ்டன்ட் கொண்டிருப்பதால் இதனை யாரும் செயல் இழக்க வைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஃப் 16 ஈ

எஃப் 16 ஈ

அமெரிக்காவின் அதி நவீன போர் விமானங்களில் ஒன்றன எஃப் 16 ஈ அகைல் பீம் ரேடார், இன்டர்னல் FLIR டார்கெட்டிங் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட காக்பிட், டிஜிட்டல் ஃப்ளைட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் கொண்டிருக்கின்றது.

எம்ஐஜி 35

எம்ஐஜி 35

அதிநவீன ஏவியோனிக்ஸ் மற்றும் ஆயுத சிஸ்டம்கள் கொண்டிருக்கும் எம்ஐஜி 35 ரக விமானமானது பல்வேறு இலக்குகளை ட்ராக் செய்து ஒரே நேரத்தில் தாக்க முடியும் என்பதோடு வெகு தூர தாக்குதல்களையும் ட்ராக் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்யூ-27

எஸ்யூ-27

ரஷ்யாவின் இந்த வகை போர் விமானத்தில் எலக்ட்ரோ ஆப்டிக் சிஸ்டம், இன்ஃப்ராரெட் சர்ச் அன்டு ட்ராக் சென்சார் மற்றும் லேசர் ரேன்ஜ் ஃபைன்டர் கொண்டிருக்கின்றது.

எஃப் 15 ஈகிள்

எஃப் 15 ஈகிள்

காக்பிட் உதவியின்றி விமானியின் ஹெட் அப் டிஸ்ப்ளேவானது ஏவியானிக்ஸ் சிஸ்டம் சேகரித்த தகவல்களை வழங்கும், இதனால் எதிரிகளின் விமானத்தை எளிதாக அழிக்க முடியும். மேலும் இந்மத விமானத்தின் பல்ஸ்-டாப்ளர் ரேடார் சிஸ்டம் மூலம் அதிக உயரம் மற்றும் குறைந்த உயரத்தில் இருக்கும் இலக்குகளை கண்டறிய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்யூ 35

எஸ்யூ 35

ரஷ்யாவின் எஸ்யூ 35 ரக விமானமானது மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ், இன்ஃப்ராரெட் சர்ச் அன்டு ட்ராக் தொழில்நுட்பம் மற்றும் எதிரி விமானங்களை முடக்கும் ஜாமிங் சிஸ்டம் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கின்றது.

யூரோஃபைட்டர் டைஃபூன்

யூரோஃபைட்டர் டைஃபூன்

மல்டி மோடு ரேடார், டிஜிட்டல் ஃப்ளை பை வயர் கண்ட்ரோல் சிஸ்டம், குரல் மூலம் இயக்கும் திறன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எஃப் 22 ரேப்டார்

எஃப் 22 ரேப்டார்

மல்டி மோடு ரேடார், மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ் சிஸ்டம், அதிக துல்லியமான தகவல்களை வழங்கும் திறன் கொண்ட ஜிபிஎஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வார்ஃபேர் கொண்டிருப்பதோடு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் சென்சார்களின் தகவல்களில் தேவையானவற்றை மட்டுமே வழங்கும்.

தகவல்

தகவல்

உலகம் அறிந்த சூப்பர் பவர் நாடுகள் அனைவருக்கும் தெரியும் வகையில் இத்தனை சக்தி வாய்ந்த விமானங்களை வைத்திருக்கும் நிலையில் ரகசியமாக இந்நாடுகள் மேற்கொண்டு வரும் ஆயுத திட்டங்கள் எவ்வளவு இருக்குமோ என்பதை நினைத்தாலே இங்கு யாரும் அமைதியை விரும்பவில்லை என்பது புலப்படும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The 10 most advanced fighter jets in the world. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்