'இது' மிக மிக முக்கியம் அமைச்சரே..!
நேரத்துக்கு நாம சாப்பிடுறோமோ இல்லயோ... நம்ம போனுக்கு நேரம் தவறாம சார்ஜ் பண்ணிடனும்..! தூங்கிட்டேன், மறந்துட்டேன்னு சார்ஜிங் விஷயத்துல ஏதாச்சும் தப்பு பண்ணிட்டீங்கனா... அவ்ளோ தான்.. உங்க கதி அரோகதி தான்..!
இப்படி 'குண்டக்க மண்டக்க' கேள்வி கேட்டா என்னத்த சொல்றது..?
யாருமே இல்லாத தனி தீவுல மாட்டிக்கிட்டதும், போன்ல சுத்தமா சார்ஜ் இல்லாம போறதும் ஒண்னு தான்..! அந்த மாதிரி நேரத்துல, நமக்கு ஒரு 'ஞான உதயம்' வரும் பாருங்க... அட..அட நம்மள எங்கயோ கொண்டு போய்டும்..! அவைகள் என்னென்ன என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..!

சத்திய சோதனை..!
"இனிமே பர்ஸை எடுக்க மறந்தாலும் மறப்பேன். போன் சார்ஜரை சத்தியமா மறக்க மாட்டேன்..!"

பிச்சை..?!
"அய்யா.. சின்ன பின் சார்ஜர் இருக்கா..? அம்மா.. பெரிய பின் சார்ஜர் இருக்கா..?"னு பிச்சை எடுக்காத குறையா எல்லோர் முன்னாடியும் போய் நிப்போம்..!

புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்ஸ்..!
"நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேனே..?"னு யாரச்சும் சொன்னா.. "உங்களுக்கு 70% இருக்கு எனக்கு 17% தான் இருக்கு, புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்ஸ்..!..!"

புது போன்..?!
"அடிக்கடி என் போன், சார்ஜ் இல்லாம செத்து போய்க்கிட்டே இருக்கு.. இருந்தாலும் நான் ஏன் புது போன் வாங்க மாட்றேன்..?"னு யோசிப்பீங்க..!

ஆகுமா..?!
"போனை வெயில்ல வச்சா சார்ஜ் ஆகும்னு சொல்லுறாங்காளே..."வச்சி பாப்போமா..?!"

பவர் பேங்க்..!
"ஆமாம்ல இப்போ நம்ம கிட்ட ஒரு பவர் பேங்க் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்,,?!"

ஞான உதயம்..!
"சந்தோஷத்துலயே பெரிய சந்தோசம் எதுனா.. 100% பேட்டரி தான்..!"

லேண்ட் லைன்..!
24 மணி நேரமும் சார்ஜிங்..! சில சமயம் நம்ம ஸ்மார்ட் போன், லேண்ட் லைன் போன் மாதிரி நம்ம கண்ணுக்கு தெரியும்..!

கேம்..!
"முதல்ல போன்ல இருக்குற எல்லா கேம்களையும் அன்இன்ஸ்டால் பண்ணனும்.. பேட்டரி நிக்கவே மாட்டேங்குது சே..!"

நேரக் கொடுமை..!
முக்கியமான போன் கால்களில் இருக்கும் போது தான் முக்கால் வாசி போன்கள் ட்ரை ஆகும்..!

டாய்லெட் பக்கம்..!
"சார்ஜர் இல்லாத ஏசி கம்பார்ட்மாண்ட்டை விட, சார்ஜர் பாயிண்ட் இருக்கும் டாய்லெட் பக்கம் எவ்வளவோ மேல்..!"

பத்தாது பத்தாது..!
"நமக்கு பேக்-அப் சார்ஜர்லாம் பத்தாது போல.. இந்த பவர் பேங்க்குக்கும் ஒரு பேக்-அப் வைக்கணும் போல..!"


Click it and Unblock the Notifications