வெறும் 33 கிராம் எடையில் செயற்கைக்கோள்கள் உருவாக்கி தஞ்சை மாணவன் சாதனை.! விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம்.!

|

உலகிலேயே மிகவும் குறைந்த எடை கொண்ட இரண்டுவகை சாட்டிலைட்டை தஞ்சை மாணவர் கண்டுபிடித்துள்ளார். மேலும் வரும் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு நாசா அனுப்பவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கரந்தை பகுதியில் வசித்து

தஞ்சையில் உள்ள கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் cubes in space புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் 2019-2020 கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார்.

வரும் 2021-ம்

மேலும் இவர் கண்டுபிடித்த இரண்டு Femto சாட்டிலைட்களும் நாசாவில் இருந்து, வரும் 2021-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான கேமரா வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11.!அசத்தலான கேமரா வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11.!

ண்ட இந்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளில் இரண்டு

குறிப்பாக 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளில் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து நாசாவிலிருந்து ஏவ இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் தேர்வாகியுள்ளார்.

37mm

பின்பு இந்த புதுவகை சாட்டிலைட்களுக்கு விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரு சாட்டிலைட்டுகளும் 37mm உயரமுடையது மற்றும் 33 கிராம் எடையுடையது.

தொழில்நுட்ப சோதனை

அதேபோல் இவைதான் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ செயற்கைக்கோள்கள் ஆகும். இந்த இரண்டு சாட்டிலைட்களும் பாலி எதரி இமைடு அல்டம் என்று சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கால், 3டி தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு இவை இரண்டுமே தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோள்கள் என்று கூறப்படுகிறது.

சவுண்டிங் ராக்கெட்

இந்த சாட்டிலைட் நோக்கமானது Atmospheric and space studies and microgravity material research என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் 11 சென்சார் இடம்பெற்றுள்ளன. பின்பு இதன்மூலம் 17parameter-களை கண்டறிய முடியும். மிகவும் குட்டியான இந்த சாட்டிலைட்கள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என மாணவர் ரியாஸ்தீன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Thanjavur Student Discovered World's Lightest Satellite!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X