'தல' புகைப்படம் எடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
பிரபல தமிழ் சினிமா நடிகரும் ரசிகர்களால் 'தல' என்று அழைக்கப்படும் அஜித் குமார் நடிப்பது மட்டுமல்லாமல் ரேடியோ கண்ட்ரோலிங், ரேசிங், மற்றும் புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
சமீபத்தில் நகைச்சுவை நடிகரும் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது பெற்றவருமான சிவபாலன் என்கிற அப்புக்குட்டியை வைத்து 'தல' எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்குது.
இன்று அஜித் குமார் புகைப்படம் எடுக்கும் போது படமாக்கப்பட்ட சில புகைப்படங்கள் டுவிட்டர் தளத்தில் வெளியாகி இருக்கின்றது. தல நிகான் கேமராவை கொண்டு விளையாடி இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நிகான் எஃப் 2
தீனா படப்பிடிப்பின் அஜித் முதல் முறையாக நிகான் எஃப்2 கேமராவை பயன்படுத்தியதாக அவரே பேட்டியில் குறிப்பிடிருந்தார்.

ஆர்வம்
முதல் முறை புகைப்படம் எடுத்ததை தொடர்ந்து பயணம் செய்யும் போதும் புகைப்படம் எடுக்க துவங்கினார் அஜித்.

குழந்தை
கொஞ்ச காலம் முன்பு தன் குழந்தையின் பள்ளியில் அஜித் புகைப்படம் எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

புகைப்படம்
இவ்வாறு பல இடங்களில் புகைப்படம் எடுத்த அனுபவத்தை 'தல' மொத்தமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஃப்ரேம்
வெளியான புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது 'தல' நிகான் கேமராவில் செமத்தியாக விளையாடி இருப்பது தெரிகின்றது.

கேமரா
'தல' பயன்படுத்தியிருக்கும் கேமரா நிகான் பிரான்டு என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது.

நிகான்
முதன் முதலில் பயன்படுத்திய பிரான்டு என்பதால் அதே நிறுவன கேமராவையே இன்றும் பயன்படுத்துகின்றார்.

நடிகர்
உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் மற்றொரு நடிகரை இந்தளவு அழகாக காட்ட முடியுமா என்பது சந்தேகமே..

கேமரா
புகைப்படங்களில் தல பயன்படுத்தி இருப்பது நிகான் நிறுவன கேமரா என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது, ஆனால் குறிப்பிட்ட மாடல் எதுவென்பது தெளிவாக இல்லை.

கேமரா
'தல' என்றைக்கும் 'தல' தான்


Click it and Unblock the Notifications