பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மூளை அறுவைசிகிச்சை!

|

டெக்சாஸ் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவர்கள் ஜென்னா ஷார்ட் என்ற 25 வயது பெண்ணை அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்து, அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அகற்றி, அவர் மூளையில் பாதிப்பு ஏற்படுத்திய ஒரு பகுதியை அகற்றியுள்ளனர். இந்த நிகழ்வை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர்.

பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட அறுவைசிகிச்சை

பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட அறுவைசிகிச்சை

இந்த மூளை அறுவைசிகிச்சை சுமார் 45 நிமிடங்கள் நேரலையாக பேஸ்புக் லைவ் இல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இந்த லைவ் வீடியோவை சுமார் 45,000 பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த அறுவைசிகிச்சை நடக்கும் பொழுது ஜென்னா ஷார்ட் சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான இரத்த நாளங்களால் பாதிப்பு

ஏராளமான இரத்த நாளங்களால் பாதிப்பு

ஜென்னா ஷார்ட்டின் நரம்பியல் சிக்கல்கள், ஒரு நாள் அவர் வேலையிலிருந்த போது, திடீரென்று பேசும் திறனை இழந்திருக்கிறார். அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். பின்னர், அவரது மூளையில் ஏராளமான இரத்த நாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?

சுயநினைவுடன் அறுவைசிகிச்சை செய்ய காரணம்?

சுயநினைவுடன் அறுவைசிகிச்சை செய்ய காரணம்?

பல மூளை அறுவை சிகிச்சைகளைப் போலவே, ஷார்ட் விழித்திருக்கும்போதே இந்த செயல்முறை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஷார்ட்டின் அறிவாற்றல் திறன்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

விண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்! காரணம் இதுதான்!விண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்! காரணம் இதுதான்!

புதிய விழிப்புணர்

புதிய விழிப்புணர்

ஜென்னா ஷார்ட்டின் அனுமதியுடன் இந்த அறுவை சிகிச்சை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனையில் உள்ளவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்குமென்று சிகிச்சை வழங்கிய மருத்துவர்களிடம் ஜென்னா தெரிவித்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Texas Hospital Live Streamed Brain Surgery on Facebook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X