100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

|

மின்சாரத்தை உருவாக்க, கார் பேட்டரிகள் பயன்படுத்தும் இரசாயன எதிர்வினைக்கு வெப்பம் ஒரு முக்கிய காரணியாகச் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது என்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், இது உள்ள ஒரு சிறிய சிக்கல் என்னவென்றால், இது பேட்டரி சிதைவின் விகிதத்தையும் அதிகரிக்கிறது. இதனால் தான், நாம் பயன்படுத்தும் பேட்டரிகளை குறுகிய காலத்தில் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறோம். பொதுவாக, ஒரு பேட்டரி எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்?

பேட்டரியின் ஆயுட்காலம் எப்படி வேறுபடுகிறது?

பேட்டரியின் ஆயுட்காலம் எப்படி வேறுபடுகிறது?

பேட்டரியின் ஆயுட்காலம் எப்படி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளது?நாம், முன்பே சொன்னது போல, இவை வெப்பத்துடன் இணைந்து செயல்படுகிறது. குளிர்ச்சியான வடக்கு காலநிலையில், ஒரு பேட்டரி ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் படி உழைக்கிறது. ஆனால், அதே பேட்டரி, வெப்பமான தெற்கு பகுதிகளில் குறைந்த காலமே நீடிக்கிறது. உதாரணத்திற்கு, இந்த பகுதியில் ஒரு கார் பேட்டரி தோராயமாக வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்கிறது.

100 ஆண்டுகள் நீடிக்கும் ஆற்றலை கொண்ட பேட்டரிகள்

100 ஆண்டுகள் நீடிக்கும் ஆற்றலை கொண்ட பேட்டரிகள்

இந்த சிக்கலுக்கு நீண்ட காலமாக விடை தேடப்பட்டு வருகிறது. இப்போது, ஒரு வழியாக கனடாவில் உள்ள டெஸ்லாவின் மேம்பட்ட பேட்டரி ஆராய்ச்சி குழு, டல்ஹவுசி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு அசாதாரணமான பேட்டரியை உருவாக்கியுள்ளது. சொன்னால், நம்ப மாடீர்கள், இவர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய பேட்டரிகள் 100 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஆற்றலை கொண்டுள்ளனவாம். எது, 100 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் பேட்டரிகளா என்று நீங்கள் சந்தேகமாகக் கேட்கலாம், எப்படிக் கேட்டாலும் உண்மை அது தான். இதை டெஸ்லா குழு சாத்தியமாக்கியுள்ளது.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

எப்படி இது சாத்தியமானது?

எப்படி இது சாத்தியமானது?

லித்தியம் ஃபெர்ரம் பாஸ்பேட் செல்களைப் போன்ற அதே சார்ஜிங் மற்றும் ஆற்றல் அடர்த்தியை வழங்கும் நிக்கல் அடிப்படையிலான பேட்டரி தொழில்நுட்பம் குறித்த ஆய்வறிக்கையை டெஸ்லா நிறுவன, வெளியிட்டுள்ளது. Electrek ஆல் முதலில் இது அறிவிக்கப்பட்டது, இந்த வளர்ச்சியானது பேட்டரி தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான ஜெப் டஹ்ன் (Jeff Dahn) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள Dalhousie பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

மின்சார வாகனங்களுக்கு அதிக வரம்பை வழங்கும் புதிய பேட்டரி

மின்சார வாகனங்களுக்கு அதிக வரம்பை வழங்கும் புதிய பேட்டரி

இவர் பல ஆண்டுகளாக லித்தியம்-அயன் பேட்டரிகளை உருவாக்கி, அவற்றை மேம்படுத்தும் பணியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறார். மேலும், அவரது பணி இன்று நாம் காணும் பேட்டரி வாழ்க்கைச் சுழற்சிகளை அதிகரித்த பிறகு, இந்த துறையில் முன்னோடியாகக் கருதப்படுகிறார். டான் உருவாக்கிய புதிய பேட்டரிகள் அவற்றின் கலவையில் நிக்கலைப் பயன்படுத்துகின்றன. இது பேட்டரிக்கு தேவையான அதிக அடர்த்தியை வழங்குகிறது. இது மின்சார வாகனங்களுக்கு அதிக வரம்பை எளிதில் அடைய அனுமதிக்கிறது.

ஆராய்ச்சி குழு சொன்ன உண்மை என்ன?

ஆராய்ச்சி குழு சொன்ன உண்மை என்ன?

லித்தியம் அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது, இவற்றில் தனித்துவமான இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சார்ஜ் செய்யப்படும் வெப்பநிலையின் அடிப்படையில் அதிகமாக நீடிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டால், பேட்டரி ஆயுள் சுமார் 100 ஆண்டுகளைத் தாண்டும் என்று ஆராய்ச்சி குழு வெளிப்படுத்திய ஆய்வு கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. இது உண்மையிலேயே பேட்டரி உருவாக்கும் முயற்சிகளில் புதிய புரட்சியை உருவாக்கப் போகிறது.

புதிய எலக்ட்ரோலைட் தொழில்நுட்பத்தில் இயங்கும் பேட்டரிகள்

புதிய எலக்ட்ரோலைட் தொழில்நுட்பத்தில் இயங்கும் பேட்டரிகள்

மேலும், கடந்த காலத்தில் நிக்கல் பேட்டரிகளில் கோபால்ட் இருந்தது. கோபால்ட்டை நெறிமுறையாகப் பெறுவது மிகப்பெரிய விகிதாச்சாரத்தின் சவாலாக உள்ளது என்பது இரகசியமல்ல. இந்த கவலைகளை அகற்ற, புதிய பேட்டரி வடிவமைப்பு அதே முடிவுகளை வழங்கும் மற்றும் பேட்டரியின் கலவையில் குறைந்த அல்லது முற்றிலும் கோபால்ட் இல்லாமல் அதே வழியில் செயல்படும். இது LiFSI லித்தியம் உப்புடன் கூடிய புதிய எலக்ட்ரோலைட் தொழில்நுட்பத்துடன் இயங்கு கூடுதல் பலனை வழங்குகிறது.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

எதிர்காலத்தின் புதிய புரட்சியா இந்த பேட்டரிகள்?

எதிர்காலத்தின் புதிய புரட்சியா இந்த பேட்டரிகள்?

100 வருடங்களுக்கு நீடித்து நிலைக்கும் பேட்டரிகளின் ஆற்றல் உண்மையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. தற்போது உள்ள பேட்டரிகளில் இருக்கும் மிக பெரிய சிக்கல் இதனால் ஒரு தீர்வை எட்டியுள்ளது. எதிர்காலத்தில், பேட்டரி பயன்பாட்டாளர்களுக்கு பேட்டரிகளை அடிக்கடி மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஒரு முறை நிறுவப்படும் பேட்டரிகள் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Tesla Researchers Develop New Battery Technology That Can Remain Charged For 100 Years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X