விரைவில் அதிநவீன டெஸ்லா: இந்தியாவில் முக்கிய பணியிடங்கள் நிரப்பும் பணி தீவிரம்!
டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவில் எச்ஆர், மார்க்கெட்டிங் மற்றும் தலைமை அதிகாரிகள் உட்பட பல பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் ப்ரீமியர் எலக்டரிக் கார்
உலகின் ப்ரீமியர் எலக்டரிக் கார் வடிவமைப்பில் டெஸ்லா நிறுவனம் முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டுமுதல் தனது மின்சார காரை இந்தியாவில் வெளியிடுவதற்கான திட்டங்களை மேற்கொண்டது. இதன் அடுத்த நடவடிக்கையாக நிறுவனம் இந்திய வணிகத்திற்கு பணியாற்றுவதற்கான முக்கிய பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய தொடங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர்
அதேபோல் டெஸ்லா இன்க், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர், மனிதவளத் தலைவர் உள்ளிட்ட தலைமை பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, சமீபத்தில் மூத்த சட்ட ஆலோசகரை பணியமர்த்தியதாக தகவல்கள் வெளியானது. மேலும் இதுகுறித்து வெளியான மற்றொரு அறிக்கையில் சுமார் 4 ஆண்டுகளாக டெஸ்லாவில் பணிபுரிந்த பிரசாந்த் மேனனை இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக பணி உயர்த்தி அறிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகாவில் மின்சார வாகன நிறுவனம்
எலான் மஸ்க் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் டெஸ்லா வருவதை உறுதிப்படுத்தினார். அதேசமயத்தில் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பிப்ரவரிமாதம், அமெரிக்காவை சேர்ந்த மின்சார வாகனம் மற்றும் தூய்மையான எரிசக்தி நிறுவனம் தனது உற்பத்தி பிரிவை கர்நாடகாவில் அமைக்க உள்ளதாக அறிவித்தார். அதற்கேற்பா டெஸ்லா நிறுவனம் பெங்களூரில் தனது அலுவலகத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உயர் பதவிகளுக்கு பணியமர்த்த நடவடிக்கை
தற்போது டெஸ்லா நிறுவனம் உயர் பதவிகளுக்கு பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக கூறப்படுகிறது. அதேபோல் ஐஐஎம் பெங்களூரின் முன்னாள் மாணவர் மனுஜ் குரானாவை இந்திய நடவடிக்கைகளுக்கான கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டுத் தலைவராக பதவியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் சார்ஜிங், டெஸ்டினேஷன் சார்ஜிங் மற்றும் ஹோம் சார்ஜிங்
அதேபோல் நிறுவனம் சார்ஜிங் மேலாளராக நிஷாந்தை நியமித்து உள்ளது. டெஸ்லா இந்தியாவுக்கான சூப்பர் சார்ஜிங், டெஸ்டினேஷன் சார்ஜிங் மற்றும் ஹோம் சார்ஜிங் வணிகத்திற்கான தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது. அதேபோல் டெஸ்லா இந்தியாவின் மனிதவளத் தலைவராக சித்ரா தாமஸை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் வால்மார்ட் மற்றும் சில்லறை நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

முழு வேகத்தில் முன்னேற்றம்
டெஸ்லா இந்தியா உள்ளூர் அணியை உருவாக்குவதில் முழு வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்தை காண நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டெஸ்லா முதல் கார்களை வழங்கும்போது உங்களை(மஸ்க்) இந்தியாவில் காணலாம் என நம்புகிறோம் என டெஸ்லா கிளப் இந்தியா டுவிட்டில் கூறியுள்ளது. அதேபோல் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், டெஸ்லா இந்தியாவில் தனது நடவடிக்கைகளை பெங்களூருவில் ஆர் அண்ட் டி பிரிவுடன் தொடங்கும் என குறிப்பிட்டார்.

பெங்களூருவில் டெஸ்லா இந்தியா
இறுதியாக டெஸ்லா இந்தியாவின் பெங்களூருவில் ஒரு நிறுவனமாக பதிவு செய்து இந்தியாவுக்குள் நுழைவதாக செய்தி வெளியானதை அடுத்து மஸ்க் வெளிப்படை அறிவிப்பை வெளியிட்டார். இந்திய சாலைகளில் மின்சார கார்களை இயக்க அனுமதி அளித்ததையடுத்து இதை நிறைவேற்றுவதற்கான பாதையில் நடவடிக்கை எடுத்து வருவதாக எலான் மஸ்க் குறிப்பிட்டார்.

படிப்படையாக முன்னேற்றம் அடைந்த டெஸ்லா
டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார்.


Click it and Unblock the Notifications