Home
News

எலான் மஸ்க் கில்லாடி தான்.. Tesla அறிமுகம் செய்யும் 6G போன்.. இனி iPhone கதி அதோகதி தான் போலயே..

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா (Tesla) நிறுவனம் விரைவில் 6ஜி மற்றும் 5ஜி இல் இயங்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் சாட்டிலைட் கனெக்ஷன், நியுராலின்க், கிரிப்டோ மைனிங் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Tesla Phone: ஆம், நீங்கள் சரியாக தான் படித்தீர்கள், டெஸ்லா அறிமுகம் விரைவில் டெஸ்லா மாடல் பை (Tesla Model Pi) அல்லது டெஸ்லா மாடல் P என்ற பெயருடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் அரசல்புரசலாக பேசப்பட்டு வந்தது. இப்போது மீண்டும் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பற்றிய வதந்திகள் பரவ துவங்கியுள்ளது.

எலான் மஸ்க் கில்லாடி தான்.. Tesla அறிமுகம் செய்யும் 6G போன்..

டெஸ்லா மாடல் பை (Tesla Model Pi):

காரணம், சில டெக் இணையதள பக்கத்தில் இதன் அறிமுகம் மார்ச் 2024 இல் எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எலான் மஸ்க் நிறுவனத்திடமிருந்து வெளிவரவிருக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய பேச்சு வழுக்கத் துவங்கியுள்ளது. எலான் மஸ்க் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தில் 6ஜி (6G) மற்றும் 5ஜி (5G) சேவை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மூளை மூலம் போனை கட்டுப்படுத்தலாமா? எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) கீழ் இயங்கும் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் அம்சமும் கூட இதில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், மனித மூளையில் பொருத்தப்பட்ட மைக்ரோசிப் மூலம் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவும் நியுராலின்க் தொழில்நுட்பத்தையும் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.

நியுராலின்க் சிப்: சமீபத்தில் மனித மூளையில் பொருத்தப்பட்ட நியுராலின்க் சிப் மூலம் ஒரு நபர் அவருடைய டெஸ்க்டாப் சாதனத்துடன் இணைக்கப்பட்ட மவுஸ் டிவைஸை தொடாமல் கட்டுப்படுத்திய நிகழ்வு உலக மக்களை ஆச்சரியப்படுத்தியது. அதேபோல், டெஸ்லா வெளியிடவிருக்கும் டெஸ்லா போன் சாதனத்தை அதன் பயனர்கள் எதிர்காலத்தில் சாதனத்தை தொடாமலே மூளை மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் கில்லாடி தான்.. Tesla அறிமுகம் செய்யும் 6G போன்..

கிரிப்டோகரென்சி மைனிங்: இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தில் கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய கூடிய அம்சங்களும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த அதிநவீன தொழில்நுட்பமாக, இந்த டெஸ்லா போன் (Tesla Phone) சாதனம் சூரியன் மூலம் சார்ஜ் செய்யப்படும் சோலார் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதை இப்போது பார்க்கலாம்.

டெஸ்லா போன் சிறப்பம்சம்: இந்த டெஸ்லா மாடல் பை ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 8GB ரேம் முதல் 16GB ரேம் வரை பெரும் அல்லது அதற்கு மேல் உள்ள ரேம் அம்சத்தை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் இது 256GB | 512GB அல்லது 1TB ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களாக வெளிவர வாய்ப்புள்ளது.

Ai கேமரா: இது உயர்திறன் கொண்ட AI அம்சத்தில் இயங்கும் குவாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பின்பக்கத்தில் 4 கேமராக்களை இது கொண்டிருக்குமாம். முன்பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் மிகவும் துளியான படங்களை பிடிக்கும் செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 5000mAh பேட்டரி உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை என்ன? டெஸ்லா போன் மோச்சா பிரவுன் (Mocha Brown), பிளாக் (Black), பாலிஷ்டு ப்ளூ (Polished Blue), பிங்க் கோல்டு (Pink Gold) நிறங்களில் வெளிவரலாம். இதன் விலை 800 டாலர் முதல் 1200 டாலர் வரை இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.66,000 முதல் ரூ.99,000 விலைக்குள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tesla Phone Model Pi Might Have Starlink Satellite Connection Neuralink Solar Charging Support
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X