டெஸ்லாவில் பணிபுரியும் சுமார் 3000 ஊழியர்கள் பணி நீக்கம் : எலான் மஸ்க் .!
குறிப்பாக லாபத்தை பெருக்கவும் பின்பு செலவை கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகலவில் மிகப் பிரபலமான நிறுவனம் டெஸ்லா, குறிப்பாக மின்கார்கள், வானுர்தி போன்றவற்றை தயார் செய்யும் நிறுவனமாக உள்ளது இந்நிறுவனம். இப்போது டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இதுகுறித்து பல்வேறு மின்னஞ்சல் கடிதம் ஊடகங்களில் கசிந்தது, ஆனால் இது உறுதியான தகவலா என்ற சந்தேகம் எழுந்தது, ஆனால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி என்று எலான் மஸ்க் தான் எழுதிய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டெஸ்லா :
எலக்ட்ரிக் வாகனங்களை தன் பெருமைமிகு படைப்புகளாக அடுக்கி வரும் டெஸ்லா நிறுவனத்தின் மற்றுமொரு பெரிய சாதனையாக எலக்ட்ரிக் ட்ரக் வெளிவந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் அட்டகாசமான வடிவத்தில் வந்திருக்கும் இது 36,285 கிலோ வரை எடையைச் சுமக்கிறது. அவ்வளவு எடையைத் தாங்கிக்கொண்டு வந்தாலும் இது 95 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள்
எலக்ட்ரிக் வாகனங்கள் செய்யும் டெஸ்லா நிறுவனம் என்று மனிதர் கால் பாதிக்காத துறைகளே இல்லை எனலாம். அவ்வப்போது ஏதேனும் புதிதாக அறிவித்து அனைவரையும் வாய்பிளக்க வைப்பது எலானின் பொழுதுபோக்கு ஆகும்.

பணி நீக்கம்
கடந்த பல ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனம் வேகமாக வளர்ந்து வளர்ச்சி கண்டது, இதனால் பல மடங்கு அந்நிறுவனத்திற்கு வருமானம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் டெஸ்லாவின் வளர்ச்சிக்கு 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, தேவையானது என்று தெரிவித்துள்ளார்.

செலவு:
குறிப்பாக லாபத்தை பெருக்கவும் பின்பு செலவை கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார், பின்பு இந்த நடவடிக்கையால் அமெரிக்க பங்குச்சந்தையில் டெஸ்லாவின் பங்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications