இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!

|

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்க டுவிட்டர் இயக்குனர் குழுவும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் டுவிட்டரில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5 சதவீதம் அளவே இருப்பதாக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதற்கு முன்னதாக எலான் மஸ்க்கை பின்தொடர்பவர்கள் பாதி பேர் போலியானவர்கள் என தனியார் நிறுவனத் தகவல் தெரிவித்திருந்தது.

போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த விவகாரம்

போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த விவகாரம்

இந்த நிலையில் மஸ்க், டுவிட்டரில் 5 சதவீதம் மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதையும் நான் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் எலான் மஸ்க், டுவிட்டரில் 20 முதல் 25 சதவீதம் வரை ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம் என தான் கருதுவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் குறைந்த விலையில் ஒப்பந்தம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஒருவர் குறிப்பிடுவதை விட மோசமான ஒன்றுக்கு நீங்கள் அதே விலையை கொடுத்து வாங்க முடியாது என குறிப்பிட்டிருக்கிறார்.

முறையான ஆவணங்கள் சமர்பிக்கும் வரை டுவிட்டரை வாங்க மாட்டேன்

முறையான ஆவணங்கள் சமர்பிக்கும் வரை டுவிட்டரை வாங்க மாட்டேன்

எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே டுவிட்டரின் 9.2% பங்குகளை மஸ்க் தன் கைவசம் வைத்திருந்தார். டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட உடன் டுவிட்டரின் பங்கு சரிவை சந்தித்தது. இதையடுத்து டுவிட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்தபோது இந்த பங்கு மதிப்பு தற்போது இல்லை. எனவே மஸ்க் டுவிட்டரை குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்து முறையான ஆவணங்கள் சமர்பிக்கும் வரை டுவிட்டரை வாங்க மாட்டேன் என மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார்.

புது விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து

புது விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து

இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, மஸ்க் தற்போது புது விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் நேரடியாக அமெரிக்க ஆளுங் கட்சியை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டிருக்கிறார். அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஆளுங் கட்சி சார்பில் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தொழிற்சங்கங்களின் ஆதரவோடு தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி

ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி

இதன் காரணமாக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தொழிற்சங்கங்கள் ஆதரவோடு தயாரிக்கப்படும் மின்சார கார்களுக்கு மட்டும் அதிக வரி சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு என எந்த தொழிற்சங்கங்களும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இனி குடியரசுக் கட்சிக்கு தான் வாக்களிப்பேன்

இதையடுத்து கடந்த காலத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாகும் இனி குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் தெரிவித்த கருத்துகள் குறித்து பார்க்கையில், கடந்த காலத்தில் நான் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களித்தேன், ஏனென்றால் அந்த கட்சி பெரும்பாலும் கருணைக் கட்சியாக இருந்தது. தற்போது இந்த கட்சி பிரிவு மற்றும் வெறுப்பின் கட்சியாக மாறிவிட்டது. எனவே இனி என்னால் அவர்களை ஆதரிக்க முடியாது. இனி குடியரசுக் கட்சிக்கு தான் வாக்களிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் தடை நீக்கப்படும்

டுவிட்டர் தடை நீக்கப்படும்

மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக உறுதி செய்யப்பட்ட உடன் டொனால்ட் டிரம்ப்-க்கு விதிக்கப்பட்ட டுவிட்டர் தடை நீக்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் தற்போது தனது ஆதரவை குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்புக்கு தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள்

மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள்

ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் நிர்வாகம் தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். கடந்த ஆண்டு வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்தை டெக்சாஸுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எலான் மஸ்க் தனது குடியிருப்பையும் டெக்சாஸுக்கு மாற்றினார். டெக்ஸாசில் மாநில வருமான வரிகள் வசூலிக்கப்படுவதில்லை.

Best Mobiles in India

English summary
Tesla Elon Musk Says Can no longer support Democrats, will vote Republican

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X