டெஸ்லா செல்ப் டிரைவிங் காரை நிலவு மெதுவாக்கியதா? வைரல் வீடியோவுடன் காரணம்.. எலான் மஸ்குக்கே இது தெரியல..

|

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் செல்ப் டிரைவிங் கார்களை அறிமுகம் செய்தது. இந்த கார்கள் தற்பொழுது அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செல்ப் டிரைவிங் கார்களை சந்திரன் மெதுவாகச் செல்ல வைக்கிறது என்ற புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆதார வீடியோ தற்பொழுது டிவிட்டரில் வைரல் ஆகிவருகிறது.

டெஸ்லா செல்ப் டிரைவிங் காரை நிலவு மெதுவாக்கியதா? வைரல் வீடியோ

டெஸ்லா செல்ப் டிரைவிங் வாகனம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, தூரத்து வானில் தெரியும் சந்திரனை ​​மஞ்சள் போக்குவரத்து விளக்குக்கென்று ஆட்டோ பைலட் ப்ரோக்ராம் தவறாக நினைத்ததால் தனது கார் மெதுவாகச் செல்வதை காரின் உரிமையாளர் கவனித்துள்ளார். டெஸ்லா வாகனத்தின் இந்த தடுமாற்றம் கேமராவில் பிடிக்கப்பட்டு டிவிட்டரில் நெல்சன் என்பவர் பகிர்ந்து கொண்டனர். அவர் டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கை தனது இடுகை உடன் டேக் செய்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, "எலோன் மஸ்க், உங்கள் குழு ஆட்டோமேட்டிக் செல்ப் டிரைவிங் பைலட் ப்ரோக்ராம் அமைப்பை நிலவு ஏமாற்றம் செய்கிறது என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். டெஸ்லா கார் வனத்தில் இருக்கும் முழு சந்திரனை ஒரு மஞ்சள் போக்குவரத்து விளக்கு என்று கருதுகிறது, மேலும் நெடுஞ்சாலையில் முன்னாள் வாகனங்கள் இல்லாத போது கூட மெதுவாகச் செல்கிறது" என்று அவர் டிவிட்டரில் எழுதியுள்ளார்.

அதேபோல், நெல்சன் தனது டெஸ்லா காருக்கான முழு செல்ப் டிரைவிங்குக்கான சந்தாவை வாங்கியதாகவும், அந்த அம்சத்தைச் சோதிக்க விரும்பியதாகவும் அவர் கூறினார். டெஸ்லா உரிமையாளர்கள் நிறுவனத்தின் முழு சுய-ஓட்டுநர் அம்சத்திற்கு சுமார் $ 99 டாலர் என்ற விலையிலும். மாதத்திற்கு $ 199 டாலருக்கும் பயனர்கள் சந்தா செலுத்தலாம் என்று டெஸ்லா சமீபத்தில் அறிவித்தது, வாகனம் வாங்கும் போது $ 10,000 கூடுதலாகச் செலுத்துவதற்குப் பதிலாக இந்த சந்தா திட்டம் வழங்கப்படுகிறது.

பௌர்ணமி என்பதனால் சந்திரன் முழு வடிவத்தில் இருந்தது என்றும், இதனால் டெஸ்லா வாகனத்தின் தன்னியக்க பைலட் அமைப்பு நிலவை ஒரு மஞ்சள் ஒளிரும் போக்குவரத்து விளக்கு என்று நினைத்து ஏமாற்றிவிட்டது என்று கூறுகிறது. மேலும், அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் சந்திரன் வழக்கத்தை விட மஞ்சள் நிறமாகத் தோன்றியுள்ளது. டிராஃபிக் லைட்டுக்காக ஐகானை காட்டிய பின்னர், கார் மெதுவாகச் செல்லும் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Tesla Autopilot Feature Mistakes Moon For Yellow Traffic Light : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X