'வொர்க் ஃப்ரம் ஹோம் ஒரு bulls***': ஊழியர்களை கேவலப்படுத்திய Elon Musk
உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) மனதில்பட்டத்தை அப்படியே வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது கருத்துக்கள், அவ்வப்போது சர்ச்சையைும், சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும். சொல்லப்போனால், ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பாக அதில் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
இதனால், அவரது ட்வீட்கள் நீக்கப்பட்டன. இதற்கு எலான் மஸ்க் "ட்விட்டரில் கருத்து சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, அந்த நிறுவனம் என்னிடம் இருந்தால் முழு சுதந்திரம் கொடுப்போன்" என்று விமர்சனம் செய்திருந்தார். சொன்னதுபோலவே, சில மாதங்களில் ட்விட்டர் நிறுவனத்தை முழுவதும் வாங்கிவிட்டார். இப்போது ட்விட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கு யாராலும் தடை போடமுடியாது.

இப்படி தனது கருத்தை முழுவதும் நம்பும் எலான் மஸ்க், இப்போது வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களை அவமானம்படுத்தும் விதமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த கருத்து வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) ஊழியர்களிடையே மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், சிஎன்பிசி (CNBC) செய்தி நிறுவனத்துக்கு எலான் மஸ்க் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது, அவரிடம் வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் துளியும் யோசிக்காமல், "வொர்க் ஃப்ரம் ஹோம் முறை தார்மீக ரீதியாக தவறானதாகும். அதோடு ஒரு bulls***" என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மஸ்க் கூறுகையில், "நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், உங்களது காரைத் தயாரித்த ஊழியர்கள் ஏன் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்?
உங்களுக்கு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களால், ஏன் வீட்டில் இருந்து வேலை செய்ய முடிவில்லை? என்று சிந்தியுங்கள். ஆனால், உங்களால் மட்டும் எப்படி முடிகிறது? இது தார்மீக ரீதியாக தவறாக தோன்றவில்லையா?. மக்களுக்கு உணவு விநியோகம் செய்பவர்கள், வாகன ஓட்டுநர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போலவே டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் சேவை சார்ந்த பணிகளை செய்துவருகிறது.
இது உற்பத்தி சார்ந்த தொழில் என்பதால், அனைவரும் அலுவலகம் அல்லது தொழிற்சாலைக்கு வந்து பணிபுரிய வேண்டும். வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் தங்களது லா-லா லேண்டில் இருந்து வெளியேற வேண்டும். பிரெஞ்சு புரட்சியின்போது, அந்நாட்டு மக்கள் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். மக்களுக்கு சாப்பிட ரொட்டி கூட இல்லாத சூழ்நிலை இருந்தது.
அப்போது ராணியாக இருந்த மேரி அன்டோனெட் "மக்களுக்கு சாப்பிட உணவில்லையென்றால் கேக் சாப்பிடட்டும்" என்று சொன்னார். ஆனால், கேக் ரொட்டியை விட விலையுர்ந்தது என்ற அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதுபோலத்தான், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலையை வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் அறிந்துகொள்வதில்லை.
ஆகவே, என்னைப் பொறுத்தவரையில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறை தார்மீக ரீதியாக தவறானதாகும்" எனத் தெரிவித்தார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் மட்டுமல்லாமல், ட்விட்டர் நிறுவன ஊழியர்களும் இப்போது அலுவலகத்துக்கு வந்து பணிபுரிந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications