அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட திகிலூட்டும் திட்டங்கள்..!

  |

  சூப்பர் பவர் நாடான அமெரிக்கா தன்னை மேன்மேலும் பலமானதாக ஆக்கி கொள்ளும் பணிகளை பல ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 1950-களில் இருந்தே ஆரம்பித்து விட்டது என்பது தான் வரலாற்று உண்மை.

  ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

  அப்படியாக, அமெரிக்க வரலாற்றில் இருந்து அமெரிக்க அரசால் தன் சொந்த மண்ணிலேயே நிகழ்த்தப்பட்ட மிகவும் பயங்கரமான ஆய்வுகள், திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகள்தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  01. ஆப்ரேஷன் பிக் இட்ச் (Operation Big Itch) :

  அதாவது, பூச்சியியல் போர் துறை சோதனை (Entomological warfare field test) ஆகும்.

  உயிரியல் ஆயுதம் :

  பிக் இட்ச் (தெள்ளு பூச்சி) - எதிரிகளை குறி வைத்து அமெரிக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது.

  டக்வே ப்ரோவைடிங் கிரவுன்ட் :

  1954-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத் தளங்களில் ஒன்றான டக்வே ப்ரோவைடிங் கிரவுன்ட் (Dugway Proving Ground) என்ற இடத்தில் ஆப்ரேஷன் பிக் இட்ச் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  மைக்ரோகிராஃப் :

  தெள்ளு பூச்சி எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் மைக்ரோகிராஃப் படம்..!

  02. ஆப்ரேஷன் ப்லம்ப்போப் (Operation Plumbbob) :

  1957 ஆம் ஆண்டு மே 28 முதல் அக்டோபர் 7 வரை அமெரிக்காவால் மொத்தம் 29 அணு ஆயுத பரிசோதனைகள், ஆப்ரேஷன் ப்லம்ப்போப் ஆகும்.

  நேவாடா பகுதி :

  நடத்தப்பட்ட 29 அணு ஆயுத பரிசோதனையும் அமெரிக்காவின் நேவாடா பகுதியில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  சர்ச்சைக்குரிய பரிசோதனை :

  மேலும் உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தொடர் அணு ஆயுத பரிசோதனையில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

  03. ட்யூ 1 அண்ட் ட்யூ 2 (Operations DEW I And DEW II) :

  1950-களில் உலக நாடுகளுக்கு உயிரியல் ஆயுதம் தான் மிக பெரிய அச்சுறுதலாக இருந்தது.

  எப்படி வெளியிடப்பட்டது :

  அதனால் 1952-ஆம் ஆண்டு அமெரிக்கா மண்ணில் சாத்தியமான உயிரியல் ஆயுதம் எப்படி வெளியிடப்பட்டது என்பதை அமெரிக்க அரசு தெரிந்துக்கொள்ள விரும்பியது.

  ஆராய்ச்சி :

  அதை பற்றிய தகவலை சேகரிக்க மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக நடத்தப்பட்டது தான் ஆப்ரேஷன்ஸ் ட்யூ 1 அண்ட் ட்யூ 2..!

  05. ப்ராஜெக்ட் 112 அண்ட் ப்ராஜெக்ட் ஷாட் (Project 112 And Project SHAD) :

  உயிரியல் ஆயுதம் எப்படி பரவுகின்றன என்பதை மேலும் நன்றாக தெரிந்து கொள்ள நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் தான் ப்ராஜெக்ட் 112 அண்ட் ப்ராஜெக்ட் ஷாட்..!

  பாலைவன சோதனை :

  ப்ராஜெக்ட் 112, 1962 முதல் 1973 ஆம் ஆண்டு வரை உட்டா பாலைவனத்தில் உள்ள பாலைவன சோதனை மையத்தில் நடத்தப்பட்டது.

  அமெரிக்க போர் கப்பல் :

  ப்ராஜெக்ட் ஷாட் ஆனது உலகம் முழுக்க இருக்கும் அமெரிக்க போர் கப்பல்களில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  06. ப்ராஜெக்ட் ஆர்டிசோக் (Project ARTICHOKE) :

  ஆர்டிசோக் என்பது ஒரு மனம் கட்டுப்பாட்டு திட்டம் (Mind-Control Project) ஆகும்..!

  6 பேர் :

  1950-களில் நடத்தப்பட்ட மனதை கட்டுப்படுத்தும் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஹிப்னாஸிஸ் :

  பல வகையான உளவியல் தாக்க சோதனைகள் மற்றும் ஹிப்னாஸிஸ் (Hypnosis) ஆகிய ஆய்வுகளில் அவர்கள் ஈடுப்படுத்தப்பட்டார்கள்.

  தகவல் சேகரிப்பு :

  ப்ராஜெக்ட் ஆர்டிசோக் ஆனது முழுக்க முழுக்க அமெரிக்க ராணுவம், விமானப்படை, கப்பல் படை மற்றும் எஃப்பிஐ (FBI) தகவல் சேகரிப்புக்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  அமெரிக்க அரசால் உள்நாட்டில் நடத்தப்பட்ட திகிலூட்டும் திட்டங்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more