டீப் வெப் : இது இண்டர்நெட் கருப்பு பக்கம்.!!

By Meganathan
|

இண்டர்நெட் உலகில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கம் தான் டீப் வெப். நாம் தினமும் பயன்படுத்தும் தேடுபொறிகளால் இன்டெக்ஸ் செய்யப்படாத, அதாவது மக்கள் நலன் கருதி மறைக்கப்படும் தரவுகளை டீப் வெப் கொண்டிருக்கின்றது. மேலும் உலகை அச்சுறுத்தி வரும் பெரும்பாலான சட்டவிரோத செயல்கள் டீப் வெப் மூலம் நடைபெறுகின்றது.

டீப் வெப் குறித்து பலரும் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்களை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

1

1

டீவ் வெப் ஆனது ஹிட்டன் வெப் அல்லது டீப்நெட் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு இடம் பெறும் தகவல்கள் பொது மக்களுக்கு தெரியாமல் மறைந்தே இருக்கும்.

2

2

2001 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் டீப் வெப்'இல் சுமார் 7500 ஜிபி அளவு வரையிலான தரவுகள் இடம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

3

3

2001 ஆம் ஆண்டு வாக்கின் படி இண்டர்நெட்டில் மொத்தம் 100 கோடி இன்டெக்ஸ் செய்யப்பட்ட தரவுகள் இருப்பதாகவும் டீப் வெப்'இல் 55,000 கோடி அளவு தரவுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

4

4

இண்டர்நெட்டில் டீப் வெப் பயன்படுத்த தி ஆனியன் ரௌட்டர் (The Onion Router) அல்லது TOR என்றும் அழைக்கப்படும் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

5

5

டார் என்பது பெயர் அறியப்படாத நெட்வர்க் ஆகும், டார் பொதுவாக வாடிக்கையாளர்களின் ஐபி முகவரியை மறைத்து, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு வழி செய்கின்றது.

6

6

உலகில் தடை செய்யப்பட்ட புத்தகங்களை டீப் வெப்'இல் படிக்க முடியும்.

7

7

பெயர் அறியப்படாத விற்பனையாளர்கள் தங்களது தரவுகளை டீப் வெப் மூலம் விற்பனை செய்வர். இது திருடப்பட்ட கிரெடிட் கார்டு தரவுகளாகவும் இருக்கும்.

8

8

டீப் வெப் மூலம் போலி அடையாள அட்டைகளையும் வாங்க முடியும். இதில் பல்வேறு நாடுகளில் போலி பாஸ்போர்ட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

9

9

டார்க் வெப் போன்றே டீப் வெப் தளங்களிலும் பிட் காயின்கள் தான் பணத்திற்கு பதில் பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

10

10

இயற்கையான போதை பொருளை நெதர்லாந்து'இல் இருந்தும் ஆயுதங்களைும் இங்கு வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Terrible Things You did not know about Deep Web. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X