மாஸ் ஐடியா.. இந்தியாவை கலக்கும் களிமண் குழாய் AC சிஸ்டம்.. சிறிய இடம் - பெரிய இடம் சூப்பர் கூலிங்.. எப்படி?
இந்த வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தை சமாளிப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. சிறிய அளவில் உள்ள இடங்களில் தோன்றும் சவால்களை சமாளிக்க ஏசி (AC), ஏர் கூலர் (Air cooler), மிஸ்ட் ஃபேன் (Mist fan), பெடஸ்டல் ஃபேன் (Pedestal fan) போன்ற சாதனங்கள் இருக்கின்றன. ஆனால், பெரிய அளவு இடங்களை குளிர்விப்பது என்பது இன்னும் கூடுதல் சவாலான காரியமாக இருக்கிறது. இதற்கு சென்ட்ரலைஸ்ட்டு ஏசி (Centralised AC) போன்றவை கைகொடுத்தாலும், எல்லோராலும் அத்தகைய தீர்வை கையில் எடுக்க முடிவதில்லை. காரணம், மின்சார கட்டணம் கையை கடித்துவிடுகிறது.
அதிக மின்சார தேவை இல்லாமல், அதிகமாக பணம் செலவு செய்யாமல், பெரிய இடங்களை இயற்கையான முறையில் குளிர்விக்க தற்போது ஒரு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. அது தான், களிமண் குழாய் கூலிங் ஏசி தொழில்நுட்பம் (clay pipe cooling AC technology). இந்த புதிய தொழில்நுட்பம் இப்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. அதிக செலவின்றி (Low cost), அதிக மின்சார தேவையும் இல்லாமல் (No current AC), நீங்கள் வசிக்கும் வசிப்பிடத்தை இது குளிர்விக்கிறது.

சிறிய இடம் முதல் பெரிய இடம் வரை சூப்பர் கூலிங்.. மாஸ் காட்டும் களிமண் குழாய் AC சிஸ்டம்:
வசிப்பிடம் என்று கூறுகையில், இது உங்கள் வீடாக இருக்கலாம், அல்லது உங்கள் அலுவலகமாக இருக்கலாம் அல்லது உங்கள் கடையாக கூட இருக்கலாம். இடம் எதுவாக இருந்தாலும், உஷ்ணத்தின் பிடியில் இருந்து அந்த இடத்தை காத்து, குளிர்விக்க அனுமதிக்கும் தொழில்நுட்பமாக இந்த களிமண் குழாய் கூலிங் ஏசி தொழில்நுட்பம் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது என்று இப்போது பார்க்கலாம்.
புதிய களிமண் குழாய் கூலிங் ஏசி சிஸ்டம் இயற்கையான (Natural cooling system) முறையில், எந்தவித சுற்றுப்புற பாதிப்பையும் ஏற்படுத்தாமல், பாதுகாப்பான குளிர்ந்த காற்றை உங்கள் வீட்டிற்குள் அனுபவிக்க அனுமதிக்கிறது. எல்லோராலும் இப்போது ரூ.20,000 அல்லது ரூ.50,000 செலவு செய்து ஏசி (AC) வாங்க முடிவதில்லை. இருப்பினும், ஏசிக்கு மாற்றான தொழில்நுட்பங்களை மக்கள் ட்ரை செய்து பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த வரிசையில், இப்போது மக்களின் ஆதரவை பெற்று, இந்தியா முழுக்க ஹை-டிமாண்ட் உடன் ட்ரெண்டில் இருக்கும் ஒரு சூப்பர் நேச்சுரல் ஏசி (Super natural AC) தொழில்நுட்பம் தான், களிமண் குழாய் கூலிங் சிஸ்டம் (Clay pipe cooling system). ஆம், களிமண் குழாய்கள் (Terracotta pipes) மூலம் உங்கள் வீட்டை நீங்கள் குளிர்விக்க முடியும்.
களிமண் குழாய் AC சிஸ்டம் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது?
இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள, உங்கள் வாயை (mouth) நீங்கள் கொஞ்சம் திறக்க வேண்டும்.
- உங்கள் வாயை அகலமாக விரித்துக்கொண்டு, உங்கள் வாய் முன் கையை வைத்து, காற்றை வெளியில் ஊதிப் பாருங்கள், உங்கள் வாயில் இருந்து வரும் காற்று சூடாக உங்கள் கையில் படும்.
- அதேபோல், உங்கள் வாயைக் குறுகலாக வைத்துக்கொண்டு, காற்றை ஊதிப்பாருங்கள், இப்போது காற்று சில்லென்று வரும்.
இந்த அடிப்படை கான்செப்டில் (concept) தான் இந்த களிமண் குழாய் ஏசி தொழில்நுட்பம் (clay pipe AC) வேலை செய்கிறது. இந்த ஐடியாவை வைத்து, இந்த களிமண் குழாயின் ஒருபக்க வாய் அகலமான வடிவமைப்பை பெற்றுள்ளது. இது உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு (Window) வெளியில் இருக்கும் படி பொருத்தப்பட வேண்டும். இந்த களிமண் குழாயின் மற்றொரு வாய் பகுதி, குறுகலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி, உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு உள்பக்கம் வருவது போல பொருத்தப்பட வேண்டும். இப்படி ஓவ்வொரு களிமண் குழாய் மீதும், ஒவ்வொரு குழாய்யாக அடுக்கி உங்கள் ஜன்னல் ஏரியாவை மூடவும். அவ்வளவு தான், இனி வெளியில் இருந்து உங்கள் வீட்டிற்குள் நுழையும் காற்று இனி தானாக ஜில் என்று மாறி, உங்கள் வீட்டின் உஷ்ணத்தை குறைத்துவிடும். இது மின்சாரம் இல்லாமல் வீட்டை குளுமைபடுத்தும் விதமாகும்.
ஏசி போன்ற ஜில் காற்றை பெற சிறிய அப்கிரேட் தேவை:
ஏசி போன்ற ஜில் காற்றை நீங்கள் பெற வேண்டுமென்றால், இந்த தொழில்நுட்பத்துடன் ஒரு சில கூடுதல் அப்கிரேட் மாற்றங்களை (upgrade changes) நீங்கள் செய்ய வேண்டும். அடுக்கப்பட்ட களிமண் குழாய்களின் மேற்பகுதியில் இருந்து தண்ணீர் (Water) விழும்படி ஒரு வாட்டர் சிஸ்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். இதை செய்ய நிறைய துளையிடப்பட்ட ஒரு சிறிய டியூபை (Tube) களிமண் குழாய்கள் மேல் வைக்க வேண்டும்.
இதன் வழியாக வரும் தண்ணீரால், களிமண் குழாய்கள் ஊறிவிடும், ஈரமான களிமண் குழாய் வழியாக வரும் காற்று அதிகப்படியான குளுமையை பெற்ற, ஏசி (AC) போட்டது போன்ற ஜில் காற்றை உங்கள் வசிப்பிடத்திற்குள் பரப்பும். இப்படி செய்வதன் மூலம், தண்ணீரில் ஊறியுள்ள குழாய்கள் வழியாக வெப்பமான காற்று உள்ளே வரும்போது, எவாபரேட்டிவ் கூலிங் (Evaporative cooling) என்ற தொழில்நுட்பத்தின் படி காற்றின் வெப்பம் குறைக்கப்பட்டுக் குளிர்ந்த காற்றாக வீட்டினுள் வந்து சேரும்.
அதாவது, சூடான காற்று அந்த ஈரமான குழாய் வழியாக வரும்போது அதில் இருக்கும் அதீத வெப்பம் ஆவியாக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக ஏசி போன்ற காற்று உங்கள் வீட்டிற்குள் வந்துசேரும். குழாய்களை ஈரப்படுத்தப் பயன்படுத்தப்படும் நீரை, ஒரு சிறிய மோட்டார் (Motor) பயன்படுத்திச் சுழற்சி முறையில் மீண்டும் மேலிருந்து வடிவது போல செய்தால், தண்ணீர் செலவையும் நம்மால் குறைக்க முடியும்.
இந்த இயற்கையான களிமண் குழாய் கூலிங் சிஸ்டம் மூலம் எவ்வளவு வெப்பத்தை குறைக்க முடியும்?
ஆனால், இதற்கு சிறிதளவு மின்சக்தி தேவை என்பதை நினைவில்கொள்ளவும். ஆனால், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் ஏசி சாதனம் பயன்படுத்தும் அளவிற்கு மின்சக்தி தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏசி பயன்படுத்தும் அளவிற்கு அதிக செலவும் இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதில்லை.
இந்த களிமண் குழாய்களை பயன்படுத்தி எவ்வளவு வெப்பத்தை குறைக்க முடியும்?
- வெறுமென சுமார் 6 முதல் 10 டிகிரி வரை உங்கள் வீட்டின் வெப்பத்தை குறைக்கலாம்.
- தண்ணீர் உடன் களிமண் குழாய்யை பயன்படுத்தினால் 15 டிகிரி வரை வெப்பத்தை குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








