2.2 மில்லியன் பேர் பப்ஜி விளையாட தடை: அதிரடி நடவடிக்கை!

|

பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடும் 2.2 மில்லியன் வீரர்களை தடை செய்துள்ளதாகவும், 1,424,854 சாதனங்களில் இருந்து பப்ஜி விளையாட்டை அணுகுவதற்கே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவியிலும், மொபைல்போனிலும் நேரம்

டிவியிலும், மொபைல்போனிலும் நேரம்

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர்.

பிரதான விளையாட்டாக பப்ஜி

பிரதான விளையாட்டாக பப்ஜி

ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்துள்ளது. பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டோ அல்லது நண்பர்களோடு அமர்ந்து கொண்டோ திடீரென ஒருவர் அவனை சுடு மெடிகிட் கொண்டுவா அப்படி இப்படி என காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கத்தும் நிகழ்வையும் நாம் பார்த்திருப்போம்.

விளையாட்டு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை

விளையாட்டு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை

பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொள்கிறார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த சிலர் நாட்டுக்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

ரூ.16 லட்சம் செலவு

ரூ.16 லட்சம் செலவு

பஞ்சாப்பில் 17 வயது சிறுவன் தனது தாயின் செல்போனை வாங்கி ஆன்லைன் வகுப்பு படிப்பதாக கூறி பப்ஜி விளையாடினார். இவர் விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்லவும், புதிய அப்ரேடுகள் பெறுவதற்கும் தனது தந்தை சேர்த்து வைத்திருந்த மூன்று வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.16 லட்சத்தை செலவிட்டார். இதையடுத்து அந்த சிறுவனை தந்தை மெக்கானிக் பணிக்கு சேர்த்து தண்டித்தார்.

முறையற்ற விளையாட்டு

முறையற்ற விளையாட்டு

இதுபோல் பலரும் தங்களது பணத்தை சிறிய அளவில் தொடங்கி பெரிய தொகை வரை பப்ஜியில் செலவிட்டு வருகின்றனர். இந்த விளையாட்டிலும் சிலர் பொருத்தமற்ற முறையில் விளையாடி ஹேக்கிங் போன்ற செயல், ஷார்ட்கட் என்ற பெயரில் முறையற்ற விளையாட்டில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.

2.2 மில்லியன் விளையாட்டு வீரர்கள் தடை

2.2 மில்லியன் விளையாட்டு வீரர்கள் தடை

மோசடி உத்திகளை விளையாட்டிலிருந்து அகற்றுவதன் நடவடிக்கையாக டென்சென்ட் உலகளவில் 2.2 மில்லியன் விளையாட்டு வீரர்கள் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பப்ஜி விளையாட்டில் வெற்றி பெற அவர்கள் முறையற்ற விளையாட்டை கையாளுகின்றனர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

மோசடி அதிகமாக உள்ளது

மோசடி அதிகமாக உள்ளது

ஆன்லைன் விளையாட்டில் தொடங்கி அனைத்திலும் ஏமாற்றுவது என்பதை யாரும் விரும்பமாட்டார்கள், ஆனால் போர்முறை பப்ஜி விளையாட்டில் மோசடி அதிகமாக உள்ளது வேதனை அளிக்கிறது என டென்செண்ட் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொருத்தமற்ற முறையில் விளையாட்டு

பொருத்தமற்ற முறையில் விளையாட்டு

பப்ஜி விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு பொருத்தமற்ற முறையில் விளையாடுகின்றனர். மோசடி அல்லாத விளையாட்டு அனுபவத்தை வழங்க டென்சென்ட் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 20-ல் தொடங்கி ஆகஸ்ட் 27 வரை

ஆகஸ்ட் 20-ல் தொடங்கி ஆகஸ்ட் 27 வரை

பப்ஜி விளையாட்டில் டெவலப்பரின் சமீபத்திய நடவடிக்கையின்படி ஆகஸ்ட் 20-ல் தொடங்கி ஆகஸ்ட் 27 வரை 1 வாரத்தில் மட்டும் 2.2 மில்லியன் பப்ஜி வீரர்களை தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,424,854 சாதனங்களின் அணுகல் தடை

1,424,854 சாதனங்களின் அணுகல் தடை

பப்ஜி டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 27 வரை, 2,273,152 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும். அதோடு 1,424,854 சாதனங்களில் இருந்து பப்ஜி விளையாட்டை அணுகுவதற்கே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெவலப்பர்களின் இந்த நடவடிக்கையின் மூலம் விளையாட்டு வீரர்கள் முறைகேடின்றி விளையாட பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றுக்காரர்கள் கையாளும் யுக்திகள்

ஏமாற்றுக்காரர்கள் கையாளும் யுக்திகள்

ஏமாற்றுக்காரர்கள் கையாளும் யுக்திகளாவது, விளையாட்டில் உள்ள கதாபாத்திரத்தை வரைபடத்தை சுற்றி வேகமாக நகர்த்துவது, இதன்மூலம் உங்கள் பாத்திரத்தை இலக்காகக் கொள்வது என்பது கடினமாக்கப்படும். அதோடு ஆட்டோ ஏய்ம் மூலம் செயல்படும் வீரர்கள் பிற வீரரை தானாகவே குறிவைத்து துல்லியமாக தாக்க உதவுகிறது. எக்ஸ்ரே விஷன் மூலம் சுவர்கள் மூலமாகவும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற முறையற்ற விளையாட்டில் ஈடுபடுபவர்களே நீக்கப்பட்டுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tencent Banned 2.2 Million Players in Pubg Who were Play Inappropriate Game

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X