மும்பை தீ விபத்தில் 16 பேரின் உயிரைக் காப்பாற்றிய 10 வயது சூப்பர் ஹீரோ.!
நேற்று மும்பையில், கிரிஸ்டல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 16 பேரை ஜென் கன்ரதன் சடவர்த்தி என்ற 10 வயது சிறுமி காப்பாற்றிய நிகழ்வு அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியது
நேற்று மும்பையில், கிரிஸ்டல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 16 பேரை ஜென் கன்ரதன் சடவர்த்தி என்ற 10 வயது சிறுமி காப்பாற்றிய நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சிறுமி அதே குடியிருப்பில் பிளாட் நம்பர் 1601 இல் குடும்பத்துடன் வசிக்கிறாள். தீ விபத்து ஏற்பட்ட பொழுது ஜென்னும் அவள் குடும்பத்துடன் வீட்டில் இருந்துருகிறாள். குடியிருப்பு லிப்ட் இல் ஏற்பட்ட தீ 12 முதல் 16 மாடி வரை வேகமாகப் பரவியது. குடியிருப்பு படிகளில் முதற்கொண்டு தீ பரவியதால் யாரும் வெளியேற முடியவில்லை.

10 வயது சிறுமி
ஜென் தனது வீட்டில் உள்ள அணைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்து விட்டு, அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளை தட்டி அவர்களையும் எச்சரித்துள்ளாள். தீ யை கண்டு அலறிய 15- 16 பேரையும் ஒன்றாக ஒரே இடத்தில் சேர்த்து அமைதிப் படுத்தி, அவள் வீட்டில் இருந்த காட்டன் மூலம் ஏர் ப்யூரிஃபையர் செய்து கொடுத்து அதன் வழி சுவாசிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளாள். உதவி வரும் வரை ஈரத் துணி பயன்படுத்தி அது மூலம் சுவாசிக்க செய்திருக்கிறாள் இந்த 10 வயது சிறுமி.

அறிவுரை கூறி காப்பாற்றிய ஜென்
தீ அணைப்பு உதவிக் கிடைக்கும் வரை அனைவரும் அதையே பின்பற்றி மூச்சுத்திணறல் இல்லாமல் பாதுகாக்கப்பாக ஜென்னுடன் இருந்திருக்கின்றனர். அந்த இக்கட்டான சூழலிலும் கூட ஜென் பக்குவமாகவும் அமைதியாகவும் நடந்து கொண்டு, அனைவரும் முன்னின்று அறிவுரை கூறி அவர்களை காப்பாற்றி இருக்கிறாள்.

சூப்பர் ஹீரோ ஜென்
அனைவரும் ஜென் உதவியோடு மூச்சுத்திணறல் இன்றி பத்திரமாக தீ அணைப்பு குழு மூலம் மீட்கப்பட்டனர். தீ அணைப்பு துறையினர், இந்த தீ விபத்தை 4 ஆம் தர தீ விபத்தாக அறிவித்திருக்கின்றனர். இப்படிப் பட்ட தீவிர தீ விபத்தில் 16 பேரைக் காப்பாற்றியது ஒரு அதிசயம் தான் என்றும் தீ அணைப்பு துறையினர் தெரிவித்தனர், அத்துடன் ஜென் இன் துணிச்சலான செயலுக்கு வாழ்த்துக்களையும் கூறி மும்பையின் சூப்பர் ஹீரோ இவள் தான் என்று பாராட்டி உள்ளனர்.

ஏர் ப்யூரிஃபையர் பாடம் நடத்திய ஆசிரியருக்கும் நன்றி
மீட்கப்பட்ட ஜென்னிடம் கேட்ட பொழுது: பள்ளியில் அவள் ஆசிரியர், தீ விபத்தின் பொது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை என்ற பாடத்தின் புரிதலினால் மட்டுமே இன்று உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தால். இதனால் மட்டுமே தன்னால் தீ விபத்தின் பொழுது காட்டன் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி ஏர் ப்யூரிஃபையர் தயார் செய்து அனைவரையும் காப்பாற்ற முடிந்ததாக ஜென் தெரிவித்துள்ளாள். பாடம் நடத்திய தனது ஆசிரியருக்கும் நன்றியைத் தெரிவித்திருக்கிறாள்.

100 பேர் பாதுகாப்பாக வெளியேற்ற பட்டனர்
இந்தப் பயங்கர தீ விபத்தில் 100 பேர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற பட்டனர். இத்துடன் ஜென் உதவி மூலம் அவள் குடியிருப்பு மாடியில் இருந்த 16 பேர் பத்திரமாக மீட்கப் பட்டு மும்பையில் உள்ள கெம்(KEM) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்தப் பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications