அறிவு + ஆர்வம் = அபாரம்..!!

By Meganathan
|

பள்ளி சென்று பாடம் படித்தவர் தான் அறிவாளி என்பது எல்லாம் கிடையாது. அனுபவத்தின் மூலமாகவும் பல விஷயங்களை கற்று கொள்ள முடியும் என தமிழ் சினிமாவில் பல வசனங்களும், காட்சி அமைப்புகளும் இருக்கின்றன.

நம்ம முன்னோர்கள் 'ஜகஜால' கில்லாடிகள் தான்..!

'கற்றோர்க்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு' இந்த கூற்று படித்தவர்களுக்கு கட்டாயம் பொருந்தும் என்றாலும், பல துறைகளில் வெற்றியாளர்களாக இருக்கும் பெரும்பாலான உலக பிரபலங்கள் அனுபவத்தின் மூலம் வாழ்க்கையை அறிந்தவர்களாகவே இருக்கின்றனர். இதே போன்று கல்வியாளர்களும் உலக வளர்ச்சியில் அபார பங்கு வகித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

கனவு வீடு கட்ட வேண்டுமா..?! இதோ 'உற்சாக பானம்'..!

இங்கு ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கையை மட்டுமே வைத்து கொண்டு நம்மவர்கள் உருவாக்கிய சில தொழில்நுட்ப கருவிகளை தான் தொகுத்திருக்கின்றோம்..

ஏலியன் டேங்க்

ஏலியன் டேங்க்

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தில் வரும் பீரங்கியை சீனாவை சேர்ந்தவர் உருவாக்கியுள்ளார். முற்றிலும் இரும்பை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த பீரங்கியின் எடை சுமார் 5 டன் என கூறப்படுகின்றது.

ரேசிங்

ரேசிங்

இந்திய மதிப்பில் ரூ.108,974.25 செலவு செய்து ரேஸ் கேம் விளையாட பிரத்யேகமான கார் உள்கட்டமைப்பை செய்துள்ளார். இது முற்றிலும் மரத்தினால் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனம்

வாகனம்

சாதாரன வாகனம், கோல்ஃப் கார்ட், கோ கார்ட் என பல்வேறு வாகனங்களில் இருந்து கிடைத்த பொருட்களை கொண்டு நான்கு பேர் வரை பயணம் செய்யமளவு இந்த வாகனம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டார் வார்ஸ்

ஸ்டார் வார்ஸ்

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வருவதை போன்று மூன்று மெத்தகளை கொண்டு மூன்று மணி நேர வடிவமைப்பில் இந்த கட்டில் வடிவமைக்கப்பட்டது.

நீர் மூழ்கி கப்பல்

நீர் மூழ்கி கப்பல்

நீரினுள் முப்பது அடி வரை செல்லும் திறன் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் முழுமையாக கட்டமைக்க மூன்று ஆண்டுகள் ஆனது.

மான்ஸ்டர் ட்ரக்

மான்ஸ்டர் ட்ரக்

அதிவேகமாக செல்லும் திறன் படைத்த இந்த மான்ஸ்டர் ட்ரக் டெய்ட்டர் ஸ்டம் என்பவர் வடிவமைத்துள்ளார்.

டிரான்ஸ்பார்மர்ஸ்

டிரான்ஸ்பார்மர்ஸ்

வெவ்வேறு கார் பாகங்களை ஒன்றிணைத்து ஹாங்ஷௌ பல்கலைகழக மாணவர்கள் 35 அடி உயர டிரான்ஸ்பார்மர்ஸ் உருவத்தை செய்திருக்கின்றனர்.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

இருசக்கர வாகனங்களின் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பறக்கும் தட்டு. இந்த பறக்கும் தட்டில் 8 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

மற்றொரு சீன வாலிபர் இந்திய மதிப்பில் ரூ.105,672 செலவு செய்து 2,600 அடி உயரம் வரை பறக்கும் ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தஹெலிகாப்டரை அரசாங்கம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோலர் கோஸ்டர்

ரோலர் கோஸ்டர்

அமெரிக்காவை சேர்ந்த ஜெர்மீ ரெய்டு டிராக் ஸ்டார் ரோலர் கோஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை கட்டமைக்க இந்திய மதிப்பில் ரூ.6,60,554 செலவானதாக கூறப்படுகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Ten Extreme DIY Projects Made By Ordinary People. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X