Home
News

ரூ.649-க்கு குவால்காம் சிப்செட் Neckband வாங்க ரெடியா? 35 மணி நேர பேட்டரி பேக்-அப் வேற இருக்கு!

"இவ்வளவு கம்மி விலைக்கு கொடுத்தா எங்க பொழப்பு என்னாகும்?" அப்படினு கேட்கும் அளவுக்கு பிரபல அசெஸ்சரிஸ் நிறுவனமான டெம்ப்ட் (Tempt) தனது புதிய நெக்பேண்ட் இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.649-க்கு குவால்காம் சிப்செட், 35 மணி நேர பேட்டரி பேக்அப், வாட்டர் ரெசிஸ்டண்ட்னு விலையைவிட அதிகமான அம்சங்கள் உடன் களமிறக்கி இருக்கிறது.

இப்போலாம் ப்ளூடூத் இயர்போன் (Bluetooth Earphones) பயன்படுத்தாதவங்களே கிடையாது. நீங்க ரோட்டுல நடந்துபோகும்போது யாரோ உங்கள பாத்து பேசுற மாதிரியே இருக்கும். ஆனால், உன்னிப்பா கவனிச்சி பாத்தாதான் தெரியும் அவங்க ப்ளூடூத் இயர்போன்ல பேசுராங்கானு. அப்படி ஒரு வேலையை பண்ணிக்கிட்டே ப்ளூடூத் இயர்போன் மூலம் கால் பேசவும் முடியும்.

வெறும் ரூ.649-க்கு குவால்காம் சிப்செட் Neckband.. இனிமே கிடைக்காது!

இதுபோல பல அம்சங்கள் ப்ளூடூத் இயர்போனில் இருக்கும் காரணத்தால் அதை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வரை ப்ளூடூத் இயர்போன், ஹெட்செட், இயர்பட்ஸ் தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் மலிவான விலையில் தரமான அம்சங்களை கொடுத்து வருகிறது டெம்ப்ட் நிறுவனம்.

அதன்படி நம்ப முடியாத விலையில் பல்வேறு அம்சங்கள் உடன் தனது டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் ( Tempt Rush neckband ) இயர்போன் மாடலை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நெக்பேண்டில் குவால்காம் சிஎஸ்ஆர் 8635 ( Qualcomm CSR 8635 ) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 10mm ஸ்பீக்கர் (10mm Speaker), வைப்ரேஷன் அலர்ட் (Vibration alert) உள்ளிட்ட பிரீமியம் மாடல் நெக்பேண்ட்டில் இருக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் இயர்போன் அம்சங்கள்: இந்த நெக்பேண்டில் குவால்காம் CSR 8635 சிப்செட் உள்ளது. 10mm நாய்ஸ் கேன்சலேஷன் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5.2 ப்ளூடூத் வசதி உள்ளது. அதில் 10 மீட்டர்கள் வரை ரேன்ஞ் கிடைக்கும். டீப் பேஸ் (Deep Bass) கிடைக்கும் வகையில் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வைப்ரேஷன் அலர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது ஸ்மார்போனில் வரும் நோட்டிஃபிகேஷன்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும். மேலும் வழக்கமாக கொடுக்கப்படும் ஆடியோ வால்யூம் கன்ட்ரோல் பட்டன்கள் மற்றும் பிளே, பாஸ் பட்டன் உள்ளது. டைப் சி போர்ட் கிடையாது, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நெக்பேண்டை 1.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 35 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். கால் பேச மட்டும் பயன்படுத்தினால் 120 மணி நேரத்திற்கு பேட்டரி நீடிக்கும். IPX7 வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளது.

இந்த டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் இயர்போன் ஆலிவ் (Olive), பிளாக் (Black) மற்றும் கிரே (Grey) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் இயர்போனில் விலை ரூ. 649 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் ( Flipkart) தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tempt Rush Neckband with Vibration Alert Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X