டெலினார் ரூ.349/- அறிமுகம் : நன்மைகளை கேட்டால் 'ஷாக்' ஆகிவிடுவீர்கள்.!
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இதர இந்திடா டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே நடந்த கட்டண யுத்தத்தில் காணாமல் போன டெலினார் நிறுவனம், சிறிது காலம் கழித்து அதன் இருப்பை வெளிப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இதர இந்திடா டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே நடந்த கட்டண யுத்தத்தில் காணாமல் போன டெலினார் நிறுவனம், சிறிது காலம் கழித்து அதன் இருப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இன்றைய தேதிவரை சந்தையில் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களில் சிலவற்றை வழங்கி வரும் டெலினார் நிறுவனம், ஏற்கனவே பார்தி ஏர்டெல் நிறுவனத்துடனான இணைப்பொன்றை அறிவித்துள்ள நிலைப்பாட்டில், தற்போது அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.349/- என்கிற புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டமானது மிகவும் வெளிப்படையாகவே ஜியோவின் ரூ.349/- கட்டண கட்டணத்துடன் போட்டியிடுகிறது. டெலினார் வழங்கும் நன்மைகளை பொறுத்தவரை ரூ.349/- ஆனது நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து, 56 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கு உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அதாவது கிட்டத்தட்ட ஜியோவின் ரூ.349/-ப்ரீபெய்ட் திட்டத்தின் அதே நன்மைகளை வழங்குகிறது.
இருப்பினும், இந்த டெலினார் திட்டமானது எந்தவொரு எஸ்எம்எஸ் நன்மையையும் அளிக்கவில்லை. மேலும் டெலினார் நெட்வொர்க்கின்கீழ் குரல் அழைப்புகள் வரம்பற்றவை தான், ஆனால் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு வரும் போது, ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1200 நிமிடங்கள் என்று வரம்பை கொண்டுள்ளது. ரோமிங் அழைப்புகள் இலவசமாக கிடைத்தாலும் கூட, எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லாதது ஒரு பின்னடைவு தான்.

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349/- ஆனது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, எந்த வரம்பும் இல்லாத 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

டெலினார் நிறுவனத்திடம் இருந்து ரூ.143, ரூ.195 மற்றும் ரூ.299 போன்ற திட்டங்களும் கிடைக்கின்றன. அதில் ரூ.143/- திட்டமானது 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. மற்றொரு திடமான ரூ.195/- ஆனது 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி டேட்டா வழங்குகிறது. இறுதியாக, ரூ.299/- ஆனது 84 நாட்களுக்கு, எந்த நெட்வெர்க் உடனாகவும், ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் அளவிலான அழைப்பு நன்மையை மட்டும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications