டெலினார் ரூ.195/-ன் நன்மைகளை கேட்டால் கண்டிப்பா ஒரு சிம் வாங்கிடுவீங்க.!

நாட்டின் பல பகுதிகளிலும் சேவைகளை வழங்கி வரும் டெலினார் நிறுவனமானது சந்தையில் நிலவும் போட்டியை கருத்தில் கொண்டு - ரூ.195, ரூ.143, ரூ.299/- மற்றும் ரூ.349/- போன்ற - சில சிறந்த கட்டண திட்டங்களை அறிமுகம்

|

போட்டியில் சற்று தாமதமாக களமிறங்கி இருந்தாலும் கூட, மிகவும் "லேட்டஸ்ட்" ஆன முறையில் அதாவது தற்போது இந்தியா டெலிகாம் துறையில் நிகழும் கட்டண யுத்தத்திற்கு ஏற்ற வண்ணம் மிகச்சரியான நிலைப்பாட்டில் டெலினார் நிறுவனம் அதன் அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது

டெலினார் ரூ.195/-ன் நன்மைகளை கேட்டால் கண்டிப்பா ஒரு சிம் வாங்கிடுவீங்க

இன்னும் சொல்லப்போனால் அறிமுகமாகியுள்ள திட்டங்களானது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவங்களின் திட்டங்களுடன் போட்டியிடும் அளவிலான நன்மைகளை கொண்டுள்ளது.

சிறந்த கட்டண திட்டம்

சிறந்த கட்டண திட்டம்

நாட்டின் பல பகுதிகளிலும் சேவைகளை வழங்கி வரும் டெலினார் நிறுவனமானது சந்தையில் நிலவும் போட்டியை கருத்தில் கொண்டு - ரூ.195, ரூ.143, ரூ.299/- மற்றும் ரூ.349/- போன்ற - சில சிறந்த கட்டண திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.195/- ப்ரீபெய்ட்

ரூ.195/- ப்ரீபெய்ட்

மேற்குறிப்பிட்டபடி இந்தத் திட்டங்கள் அனைத்துமே இதர தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணையாக காம்போ நன்மைகளை (வாய்ஸ் மற்றும் டேட்டா) நன்மைகளை அளிக்கின்றன. டெலினார் வீட்டிலிருந்து கிடைக்கும் சிறந்த திட்டங்களில் ஒன்றான அதன் ரூ.195/- ப்ரீபெய்ட் திகழ்கிறது.

செல்லுபடி

செல்லுபடி

இந்த ரூ.195/- திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. உடன் இந்த ரூ.195/- ஆனது அதன் செல்லுபடியாகும் காலத்திற்காக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் அளிக்கும்.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

டெலினார் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மற்றொரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டமான ரூ.143/- ஆனது 2ஜிபி அளவிலான 2ஜி/4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ரூ.143/- திட்டமானது எந்த எஸ்எம்எஸ் சலுகைகளையும் வழங்கவில்லை.

1ஜிபி அளவிலான டேட்டா

1ஜிபி அளவிலான டேட்டா

அடுத்ததாக உள்ள ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

ரூ.349

ரூ.349

இந்த ரூ.349/- திட்டமானது டெலினார் நிறுவனத்தின் போர்ட்போலியோவில் சாத்தியமான சிறந்த திட்டமாகும். மேலும் இதன் செல்லுபடியைப் பொறுத்தவரை இதர நிறுவனங்களுக்கு கடும்போட்டியை விளைவிக்கும் ஒரு திட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.299

ரூ.299

இறுதியாக உள்ள ரூ.299/- ஆனது ஒரு குரல் அழைப்பு திட்டமாகும். இது நாடு முழுவதும் எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. வரம்புகளை பொறுத்தமட்டில் (நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி) மற்ற வலையமைப்புகளுக்கு ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் வரையறுக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

4ஜி செயல்பாடு

4ஜி செயல்பாடு

உடன் இந்த திட்டங்கள் அனைத்தும் டெலினார் நிறுவனத்தின் 4ஜி செயல்பாடுகளை கொண்ட வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் 4ஜி செயல்பாடுகளை நிறுவனம் வழங்கி வருகிறது. ஆக இந்த திட்டங்கள் அந்தந்த வட்டத்தில் கிடைக்கின்றன.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த இடத்தில் டெலினார் ஏற்கனவே முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் தனது சந்தாதாரர்களை ஒன்றிணைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதும், அடுத்த சில மாதங்களில் ஒப்பந்தம் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
உள்-வட்ட சேவை

உள்-வட்ட சேவை

அறியாதோர்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெலினார் நிறுவனமானது பார்தி ஏர்டெல் உடன் அதன் இணைப்பை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கோவா மற்றும் குஜராத் ஆகிய வட்டாரங்களில் உள்-வட்ட சேவையை ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கி வருகிறது.

ஜியோ அதிரடி: ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.799/- கிடைக்கும்; இதை பெறுவது எப்படி.?

ஜியோ அதிரடி: ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.799/- கிடைக்கும்; இதை பெறுவது எப்படி.?

முடிந்த அளவிலான காம்போ (வாய்ஸ் + டேட்டா) நன்மைகளை வழங்கிய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் ங்அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவைகள் ஜியோவைப்போன்றே பெரும்பாலான திட்டங்களில் நன்மைகளை வழங்கிவருவதால் ஜியோ அதற்கும் ஒருபடி மேல் சென்று கேஷ்பேக் சலுகைகளை வழங்கி வருகிறது.

பெறுவது எப்படி.?

பெறுவது எப்படி.?

அப்படியாக ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் புதிய கேஷ்பேக் வாய்ப்பானது நம்பமுடியாத வண்ணம் 200% அளவிலான பணத்தை திருப்பி தருகிறது. இந்த கேஷ்பேக் வாய்ப்பை பெறுவது எப்படி.? என்பதை விரிவாக காண்போம்.!

குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில்

குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில்

இந்த 200% அளவிலான கேஷ்பேக் வாய்ப்பானது ரூ.399/- அல்லது அதற்கும் மேலான ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை நிகழ்த்துவதின் மூலம் நீங்கள் ரூ.799/- வரையிலான லாபத்தை பெறலாம். சுருக்கமாக சொன்னால் ஜியோ நிறுவனமானது 200% நன்மைகளை குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில் வழங்குகின்றது.

முதலில் 100% கேஷ்பேக்

முதலில் 100% கேஷ்பேக்

இந்த வாய்ப்பைப் பற்றி பேசுகையில், உங்கள் ஜியோ எண்ணில் இருந்து ரூ.399/- என்கிற குறைந்தபட்ச ரீசார்ஜை நிகழ்த்தினால் ரூ.50/- மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் உங்களுக்கு கிடைக்கும். அதாவது மொத்தம் ரூ.400/- மதிப்பிலான 100% கேஷ்பேக்கை முதலில் பெறுவீர்கள்.

ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடி

ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடி

ஜியோவில் இருந்து எதிர்கால ரீசார்ஜ்களை நிகழ்த்தும் போது, உங்களுக்கு கிடைக்கும் கெஸ்பேக் ரீசார்ஜ் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான சொற்களில் உங்களின் அடுத்த ரீசார்ஜ்ஜில் ரூ.50/- மதிப்பிலான ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடியாக பெறலாம்.

மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி

மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி

ரூ.799/- என்கிற கேஷ்பேக்கில் ரூ.400/- இப்படி கழிய, மீதமுள்ள ரூ.399/- ஆனது வாடிக்கையாளர்களுக்கு மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளின் வேலட்களின் வழியாக, வேறுபட்ட மதிப்புக்கான கேஷ்பேக் வாய்ப்புகளாக கிடைக்கும்.

ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள். நீங்கள்

ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள். நீங்கள்

மொபிவிக் வழியாக ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள். பேடிஎம் வழியாக பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அதன் பின் நிகழ்த்தும் முதல் முறை திரைப்பட டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.150/- சலுகை கிடைக்கும் அதாவது 50% கேஷ்பேக் கிடைக்கும்

ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக் ஜியோ வழங்கும் இந்த

ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக் ஜியோ வழங்கும் இந்த

200% வாய்ப்பானது கடந்த பிப்ரவரி 1, 2018 தொடங்கி பிப்ரவரி 15, 2018 வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளை பொறுத்தமட்டில் புதிய ரீசார்ஜ் பயனர்களுக்கு முறையே ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு முறையே ரூ.30, ரூ.50. ரூ.30/- மற்றும் ரூ.30/- என்கிற கேஷ்பேக்கும் கிடைக்கும்.

இது நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும்

இது நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும்

கடந்த அக்டோபர் முதல் ஜியோ அதன் பிரதம உறுப்பினர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளை தொடர்ச்சியான முறையின்கீழ் வழங்கி வருகிறது என்பதும் இந்த 200% கேஷ்பேக் ஆனது நிறுவனத்தின் நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

கற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ.!

கற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் திருத்தப்பட்ட குடியரசு தின 2018 திட்டங்களானது அதன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலைபப்பாட்டில் மேலுமொரு இன்ப அதிர்ச்சியை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மேலும் இரண்டு பிரதான திட்டங்களானது திருத்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. அதாவது ரூ.509/- மற்றும் ரூ.299/- ஆகிய இரண்டு திட்டங்களும் அதிரடியான திருத்தத்தை பெற்றுள்ளது. அதென்ன திருத்தம்.? இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? உடன் இந்த திட்டங்களின் முந்தைய நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

ரூ.509/- திட்டமானது இனி

ரூ.509/- திட்டமானது இனி

திருத்தம் கண்டுள்ள ரூ.509/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.299/- ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான தரவை வழங்கும்.

28 நாட்களுக்கு செல்லுபடி

28 நாட்களுக்கு செல்லுபடி

இந்த திட்டங்களின் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்திற்கு அல்லது மைஜியோ பயன்பாட்டிற்கு சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோவின் புதிய திட்டமான ரூ.299/- ஆனது கடந்த டிசம்பரில் அறிமுகமானது எனதும் இந்த திட்டம் ஆரம்பத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Telenor is Offering 1.5GB 4G Data Per Day With Rs 195. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X