Home
News

163 ஆண்டு கால பாரம்பரிய தந்தி சேவை இன்றுடன் முடிந்தது

இப்போதைய காலத்தில் செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் மாடர்னாகி விட்ட நிலையில், நமது பாரம்பரியமான, தந்தி சேவையை இன்று ஜூலை 15 ஆம் தேதியுடன் பி.எஸ்.என்.எல் நிறுத்தியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது சகலரும் உபயோகிக்கும் செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், பெரும்பாலானோர் பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தி வந்தனர்.

2003 வாக்கில் 500 ரூபாய்க்கு செல்போன், இன்கம்மிங் கட்டணம் இலவசம், அவுட்கோயிங் ரூ. 1 அல்லது 2 ரூபாய்தான் என தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போன் சேவை சந்தையில் களமிறங்கியது.

இதனால் குடிசை வீடு முதல் கோபுரங்கள் வரை எல்லோர் கையிலும் செல்போன்கள். அத்துடன் கம்ப்யூட்டர் புழக்கம் உள்ளவர்கள் இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என தங்களது தகவல் பரிமாற்றங்களை ஹைடெக்க்காக மாற்றிக் கொண்டுவிட்டனர். இதன் விளைவு தந்தி என்ற ஒரு சேவை இருப்பதே பெரும்பாலானோருக்கு மறந்துவிட்டது.

இதனால் இந்திய அரசுக்கு கடந்த 7 வருடங்களில் 250 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாம். அதனால் பி.எஸ்.என்.எல் இந்த சேவையை நிறுத்தியது.

கீழே உள்ள சிலைட்சோவில் தந்தி சேவையை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

Click Here For Latest Gadgets Gallery

தந்தி சேவை

தந்தி சேவை

1837ல் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் எப். பி மோர்ஸ் என்பவர் இந்த சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

தந்தி சேவை

தந்தி சேவை

இந்தியாவில் இந்த சேவை 1850 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

தந்தி சேவை

தந்தி சேவை

இந்தியாவில் முதல் தந்தி கொல்கத்தாவின் கிழக்கு நகரத்தில் இருந்து தெற்க்கு பகுதியில் உள்ள டைமெண்ட் கார்பர் என்னும் இடத்திற்க்கு அனுபப்பட்டது.

தந்தி சேவை

தந்தி சேவை

இந்த இரு இடங்களுக்கும் இருந்த இடைவெளி 25 மைல்கள் ஆகும்.

தந்தி சேவை

தந்தி சேவை

1854ல் இந்த சேவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்பட தொடங்கியது.

தந்தி சேவை

தந்தி சேவை

1980களில் இந்தியாவில் 45,000 தந்தி அலுவலகங்கள் இருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்தனர்.

தந்தி சேவை

தந்தி சேவை

அந்த காலத்தில் ஒரு நாளைக்கு 6,00,000 தந்திகள் அனுபப்படுமாம்.

தந்தி சேவை

தந்தி சேவை

பிறந்த செய்தி, இறந்த செய்தி, வேலை கிடைத்த செய்தி என பல தகவல்கள் இதில் அனுபப்பட்டன.

தந்தி சேவை

தந்தி சேவை

சிவிலியன் அவார்ட் மற்றும் கோர்ட் சம்மன் போன்ற செய்திகளை இதில் தான் அரசு அனுப்புமாம். சமீபமாக இந்தியாவில் 75 தந்தி அலுவலகங்களே இருந்தது.

தந்தி சேவை

தந்தி சேவை

1947ல் இந்திய பாக்கிஸ்தான் பிரிவினை போரின் போது 2 கோடி தந்திகள் அனுபப்பட்டதாம்.

தந்தி சேவை

தந்தி சேவை

கடைசி தந்தியாக பி.எஸ்.என்.எல் அலுவலகர் ஒருவர் ராகுல் காந்திக்கு தந்தி அனுப்பினாராம்.

தந்தி சேவை

தந்தி சேவை

163 ஆண்டு கால பாரம்பரிய தந்தி சேவை இன்றுடன் முடிந்தது.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X