நீங்களுமா டெலிகிராம்.. புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்ய திட்டம்? முழு விவரம்.!

|

வாட்ஸ்அப்செயலியைப் போன்றே டெலிகிராம் செயலியையும் உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக டெலிகிராம் செயிலியில் வரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனம் புதிய பிரீமியம்
அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

டெலிகிராம் நிறுவனம்

டெலிகிராம் நிறுவனம்

அதாவது டெலிகிராம் நிறுவனம் இப்போது விளம்பரங்களை நிர்வகிக்கும் பகுதியை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. எனவே இந்நிறுவனம் தற்போது புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய பிரீமியம் சேவை அறிமுகமானால் பயனர்கள்சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

அனைவரும் கட்டணம் செலுத்

ஆனால் அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது விளம்பரங்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள், மாத சந்தாவை செலுத்தி, விளம்பரங்களற்ற சேவையை அனுபிவிக்க முடியும். இருந்தபோதிலும் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு கூடுதல் அம்சங்கள் கிடைக்கும் எனத்தகவல் வெளிவந்துள்ளன.

அடடா., வேற லெவல்- ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.27,000 தள்ளுபடி: சரி., ஐபோன் 14 வரப்போகுதே இதை வாங்கலாமா?அடடா., வேற லெவல்- ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.27,000 தள்ளுபடி: சரி., ஐபோன் 14 வரப்போகுதே இதை வாங்கலாமா?

பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு

வெளிவந்த தகவலின்படி, பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு தனி ஸ்டிக்கர்களும், எமோஜிகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பீட்டா டெஸ்டிங் பயனர் ஒருவர் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுதான் என்ன: காலையில் ஒன்னு சொல்றாங்க., மாலையில் ஒன்னு சொல்றாங்க- ஆதார் அறிவுறுத்தல் விவகாரம்!முடிவுதான் என்ன: காலையில் ஒன்னு சொல்றாங்க., மாலையில் ஒன்னு சொல்றாங்க- ஆதார் அறிவுறுத்தல் விவகாரம்!

பிரீமியம் அம்சங்கள் தற்போது

அதேபோல் இந்த பிரீமியம் அம்சங்கள் தற்போது சோதனைகளில் மட்டுமே கிடைக்கின்றன. பின்பு விலை நிர்ணயம் மற்றும் பயனர்களுக்கு
பதிவு வரைமுறை ஏதும் உள்ளதா என்பது குறித்த கூடுதல் தகவல்களை டெலிகிராம் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய iPhone 14 மற்றும் iOS 16 பற்றிய சுவாரசிய தகவல்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஆப்பிள்?புதிய iPhone 14 மற்றும் iOS 16 பற்றிய சுவாரசிய தகவல்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஆப்பிள்?

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

மேலும் வாட்ஸ்அப் ஆதரவை சில ஐபோன் மாடல்களுக்கு நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) தகவல்களின் படி, சில ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு அளித்து வரும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், பின்பு அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!

 ஐஒஎஸ் 11 (ios 11) இயங்குதளம்

குறிப்பாக ஐஒஎஸ் 11 (ios 11) இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் வரும் அக்டோபர் 24-ம் தேதி இதன் காலக்கொடுவாக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 24-ம் தேதிக்கு பிறகு இந்த இயங்குதளங்கள் கொண்டு இயங்கும் ஆப்பிள் ஐபோன்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த
முடியாது.

ஐபோன் 5சி போன்ற மாடல்களுக்கு

ஐபோன் 5, ஐபோன் 5சி போன்ற மாடல்களுக்கு இதுவரை ஐஒஎஸ் 12 (ios 12) இயங்குதள அப்டேட் கிடைக்கவில்லை. எனவே இந்தஐபோன் மாடல்கள் சிக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 5 சீரிஸ் மாடல்களை இப்போதும் கூட அதிக பயனர்கள்உபயோகித்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது

ளத்தில் பாதுகாப்புக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகள்

வாட்ஸ்அப் தளத்தில் பாதுகாப்புக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே பழைய இயங்குதளங்களுக்கு ஒன்றியதாக வாட்ஸ்அப்பின்
புதிய அப்டேட்டுகள் இருக்காது. குறிப்பாக பழைய பதிப்புகளுக்கு ஈடாக புதிய கால தொழில்நுட்பங்களை நிறுவ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Telegram plan to introduce premium subscription: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X