விரைவில் வீடியோ காலிங் வசதியை கொண்டுவரும் டெலிகிராம்.!
வீடியோ கால் வசதியை தற்சமயம் பல்வேறு செயலிகள் கொண்டுவந்துவிட்டது, குறிப்பாக வாட்ஸ்அப் முதல் பேஸ்புக் வரை சிறந்த வீடியோ கால் சேவையை வழங்கி வருகிறது. மேலும் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாளராக இருக்கும் டெலிகிராம் செயலி ஆனது அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்துகொண்டேதான் இருக்கிறது.

ஆனாலும் இந்த டெலிகிராம் செயலியில் இதுவரை வீடியோ காலிங் வசதி வழங்கப்படாமல் இருந்தது, தற்சமயம் வெளிவந்த தகவலின்படி விரைவில் இந்த செயலியில் வீடியோ கால் சேவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

டெலிகிராம் செயிலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் டெலிகிராம் செயிலியில் வீடியோ கால் அமசம் இந்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் டெலிகிராம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள வீடியோ கால் அம்சம் செயலியின் 7.0வெர்ஷனில் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

உடனே ஆண்ட்ராய்டு செயலியில் இந்த புதிய அம்சத்தை இயக்க விரும்பினால், மைக்ரோசாப்ட் ஆப் சென்டர் மூலம் கனெக்ட் செய்து புதிய ஏபிகே வெர்ஷன் டவுன் செய்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவல்களின்படி டெலிகிராமின் வீடியோ காலிங் இன்டர்பேஸ் மற்ற செயலிகளில் உள்;ளதை போன்ற காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பின்புறம் மற்றும் முன்புற கேமராக்களை மாற்ற ஆன் ஸ்கிரீன் பட்டன் வழங்கப்படுகிறது. இதேபோன்று வீடியோ டாகிள், மியூட் மற்றும் குளோஸ் செய்யக்கோரும் பட்டன்களும் ஸ்கிரீனில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒரு வருடத்திற்கு முன்பு டெலிகிராம் 300மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களை தன்வசம் கொண்டு இருந்தது, தற்போது 400மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் மன்த்லி யூஸர்களை கொண்டுள்ளது. ஆக ஒரு புதிய அம்சத்தினை கொண்டு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்பதை டெலிகிராம் நன்கு அறியும்.

பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. அவ்வாறு வேலை செய்யும் மக்கள் வீடியோ கான்பரன்சிங் வசதிக்காக ஜூம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். அதேபோல இந்த டெலிகிராம் வீடியோ சேவை வசதியும் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications