Home
News

சத்தமில்லாமல் டெலிகிராம் செய்த புதிய சாதனை.! எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப், சிக்னல் போன்ற பல்வேறு செயலிகளுக்கு போட்டியாக பல்வேறு புதிய அம்சங்கள் டெலிகிராம் செயலியில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் இந்த டெலிகிராம் செயலியை அதிக மக்கள பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

 டெலிகிராம் செயலி ஆனது 1

இந்நிலையில் டெலிகிராம் செயலி ஆனது 1 பில்லியன் டவுன்லோட்களை கடந்துள்ளதாக சென்சார் டவர் அறிக்கைவெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை அறிவிப்புக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது, எனவே பல்வேறு மக்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற மாற்று செயலிகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

ம் இந்தியாவில் டெலிகிராம் செயலியை

அதிலும் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மக்கள் அதிகம் பயன்டுத்த துவங்கிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகளுக்கு போட்டியாக பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவந்தது இந்த டெலிகிராம் செயலி. அதாவது க்ரூப் வீடியோ கால்ஸ்,ஸ்க்ரீன் ஷேரிங் வித் சவுண்ட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாய்ஸ் சாட் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுவந்தது டெலிகிராம் செயலி.

சென்சார் டவர் வெளியிட்ட அறிக்கையின்படி

சென்சார் டவர் வெளியிட்ட அறிக்கையின்படி, டெலிகிராமின் மிகப்பெரிய இணையச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும், சுமார் 22 சதவிகிதம் இந்திய மக்களால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

 டெலிகிராம் செயலி 2021-ம்

குறப்பாக இந்த டெலிகிராம் செயலி 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் 214.7 மில்லியன் நிறுவல்களை எட்டியது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக மக்கள் இதை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

ட்ஸ்அப் செயலியில் இருக்கும் ஒரு சில

அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் ஒரு சில அமசங்கள் இந்த டெலிகிராம் செயலியிலும் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி இந்த டெலிகிராம் செயலியில் இருப்பதால்தற்போது அதிக மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.

டெலிகிராம் செயலியை அதிக மக்கள்

குறிப்பாக டெலிகிராம் செயலியை அதிக மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான காரணம் வாட்ஸ்அப்பின் தனியுரிமை கொள்கைகள் தான். வாட்ஸ்அப் மட்டும் தனியுரிமை கொள்கையை அறிவிக்கவில்லை என்றால் இது சாத்தியமே கிடையாது. அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனமும் தற்போது பல்வேறு செயலிகளுக்கு போட்டியாக புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது.

 டெலிகிராம் நிறுவனம் சமீபத்தில்

அதேபோல் டெலிகிராம் நிறுவனம் சமீபத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆயிரம் யூசர்கள் வரை ஒரே நேரத்தில் வீடியோ காலில் பங்கேற்க முடியும். பின்பு 30 பேர் வரை தங்களது செல்போன் கேமராவில் இருந்து பிராட்காஸ்ட் செய்யும் வசதியை கொடுத்துள்ளது டெலிகிராம் செயலி. குறிப்பாக இந்த வசதிகள் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
டெலிகிராம் தெரிவித்த தகவலின்படி, வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும், ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கும் சிரமங்களை குறைக்கும் விதமாக இந்த அப்டேட்டை வெளயிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெலிகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இதுதவிர வீடியோக்களை 0.5 செகண்ட் முதல் 2X வரை பாஸ்ட் ஃபார்வேர்டு செய்யும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது டெலிகிராம் நிறுவனம். பின்பு நீங்கள் படங்களை பார்த்து கொண்டிருந்தால், அதனை நண்பர்களுடன் ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதியையும்
கொடுத்துள்ளது டெலிகிராம்.

Best Mobiles in India

English summary
Telegram is reported to have crossed 1 billion downloads worldwide: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X