WhatsApp ஆபத்தானது யூஸ் பண்ணாதீங்க.! முழுசா நம்பாதீங்க.! சொன்னது யார் தெரியுமா?

|

நீங்கள் WhatsApp பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் ஆபத்தானதாம், உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள வாட்ஸ்அப் உங்களை முழு நேரமும் கண்காணிக்கிறதாம், வாட்ஸ்அப் பில் தனிநபர் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கிறதாம், இப்படி அடுக்கடுக்காக வாட்ஸ்அப் பற்றி மிகவும் மோசமான உண்மைகளைக் கூறியது வேறு யாருமில்லை Telegram ஆப்ஸிற்கு சொந்தக்காரரான டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தான்.

வாட்ஸ்அப் உங்களை கண்காணிக்கிறதா?

வாட்ஸ்அப் உங்களை கண்காணிக்கிறதா?

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் வாட்ஸ்அப்பை சர்வைலென்ஸ் டூல் என்று அழைக்கிறார்.அதாவது, வாட்ஸ்அப் ஒரு "கண்காணிப்பு கருவி" என்று அவர் குறிப்பிடுகிறார்.

மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் WhatsApp ஆப்ஸிலிருந்து விலகி இருக்குமாறு பயனர்களை வலியுறுத்தியுள்ளார். ஆம், உண்மை தான். இப்படியே தான் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

வாட்ஸ்அப்பைத் தவிர வேறு எந்த ஆப்ஸை வேண்டுமானாலும் யூஸ் பண்ணுங்க.!

வாட்ஸ்அப்பைத் தவிர வேறு எந்த ஆப்ஸை வேண்டுமானாலும் யூஸ் பண்ணுங்க.!

கடந்த மாதம் WhatsApp வெளியிட்ட பாதுகாப்புச் சிக்கலை எடுத்துரைத்த துரோவ், வாட்ஸ்அப் பயனர்களின் தரவை ஆபத்தில் வைத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

வாட்ஸ்அப்பைத் தவிர வேறு எந்த இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸை (Instant Messaging Apps) வேண்டுமானாலும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெலெக்ராம் (Telegram) ஆப்ஸ்-க்கு சாதகமாக இதை தெரிவிப்பதாக தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

WhatsApp தகவலை ஹேக்கர்கள் அணுக முடியுமா?

WhatsApp தகவலை ஹேக்கர்கள் அணுக முடியுமா?

"வாட்ஸ்அப் பயனர்களின் மொபைலில் உள்ள அனைத்தையும், ஹேக்கர்களால் முழுமையாக அணுக முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.

இது WhatsApp பயனர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், கடந்த 13 ஆண்டுகளாக வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் காணப்படும் பாதுகாப்பு சிக்கல்கள் உண்மையில் வேண்டுமென்றே விதைக்கப்பட்டவை என்று கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் இல் ஹேக்கர்கள் அணுகக்கூடிய பேக்டோர் எண்ட்ரன்ஸ் உள்ளதா?

வாட்ஸ்அப் இல் ஹேக்கர்கள் அணுகக்கூடிய பேக்டோர் எண்ட்ரன்ஸ் உள்ளதா?

வாட்ஸ்அப் இல் இன்ஸ்டால் செய்யப்பட்ட பேக்டோர் விருப்பங்கள் (Backdoor) இருப்பதாகவும், இதைப் பற்றி பயனர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கங்கள், சட்ட அமலாக்க மற்றும் ஹேக்கர்கள் போன்றவர்கள் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சுற்றி வர இந்த பேக் டோர்கள் பெரிதும் உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

துரோவ் மேலும் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஒரு சிக்கல்களையாவது நாம் அறிந்துகொள்கிறோம்.

உங்களுக்கு Airtel மற்றும் Jio 5G சிக்னல் கிடைக்குதா? உங்க போனில் உடனே இப்படி செக் செய்யுங்க.!உங்களுக்கு Airtel மற்றும் Jio 5G சிக்னல் கிடைக்குதா? உங்க போனில் உடனே இப்படி செக் செய்யுங்க.!

WhatsApp உங்களை ஆபத்தில் வைத்துள்ளதா?

WhatsApp உங்களை ஆபத்தில் வைத்துள்ளதா?

பயனர்களின் சாதனங்களில் உள்ள அனைத்தையும் WhatsApp ஆபத்தில் வைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் பூமியில் பணக்காரராக இருந்தாலும் சரி, இல்லை என்றால் யாராக இருந்தாலும் சரி, உங்கள் போனில் WhatsApp இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், உங்கள் சாதனத்தில் உள்ள ஒவ்வொரு பயன்பாட்டிலிருந்தும் உங்கள் எல்லா தரவையும் வாட்ஸ்அப்பால் அணுக முடியும் என்பதை மறக்காதீர்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மக்கள் WhatsApp பயன்பாட்டை பயன்படுத்த வேண்டாம் - Pavel Durov.!

மக்கள் WhatsApp பயன்பாட்டை பயன்படுத்த வேண்டாம் - Pavel Durov.!

மேலும், டெலிகிராம் நிறுவனர் வாட்ஸ்அப் பற்றிக் கூறுகையில், வாட்ஸ்அப் நிறுவனம் சில அடிப்படை மாற்றங்களைச் செய்யாவிட்டால், வாட்ஸ்அப் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்காது என்று Pavel Durov கூறுகிறார்.

ஆனால், அதுவரை மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்வதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக நான் மக்களை டெலெக்ராமிற்கு மாற வலியுறுத்துவதாக நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Telegram ஆப்ஸில் எவ்வளவு பயனர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

Telegram ஆப்ஸில் எவ்வளவு பயனர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

டெலிகிராமிற்கு கூடுதல் பதவி உயர்வு தேவையில்லை என்கிறார், ஏனெனில், தற்போது 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டெலெக்ராம் (Telegram Apps) பயன்படுத்துகிறார்கள்.

அதேபோல், நாளொன்றுக்கு சுமார் 2 மில்லியன் பயனர்களுடன் நிலையான வளர்ச்சியை டெலெக்ராம் பதிவு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றி பேசுகையில், வாட்ஸ்அப் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (End-to-End Encryption) வழங்குவதாகக் கூறுகிறது.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

Telegram ஆப்ஸில் எவ்வளவு பயனர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

Telegram ஆப்ஸில் எவ்வளவு பயனர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

இருப்பினும், பயன்பாடு பல முறை பிழைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இது அதன் தனியுரிமை பற்றிய கேள்விகளை அடிக்கடி எழுப்புகிறது என்று கூறியுள்ளார். கடந்த மாதம் கூட வாட்ஸ்அப்பில் கிருட்டிகள் பிழை (Critical Vulnerability) கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்றாம் நபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க உடனடியாக அதன் பயனரை அப்டேட் செய்யச் சொன்னது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஒரு ஆப்ஸை பயன்படுத்த வேண்டும் என்றால், உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Telegram Founder Says WhatsApp Is a Surveillance Tool and Asked Users To Stop Using It

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X