Home
News

டெலெக்ராம் ஓனர் தனது சொந்த விமானத்தில் கைது.. ஒருவர் மீது இத்தனை குற்றசாட்டுகளா? என்ன காரணத்திற்காக கைது?

டெலிகிராம் ஆப்ஸ் (Telegram Apps) இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் சனிக்கிழமை மாலை பாரிஸுக்கு அருகிலுள்ள போர்கெட் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். டெலெக்ராம் ஆப்ஸின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இவர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்? இவர் மீது என்ன குற்றங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது? டெலெக்ராம் ஆப்ஸில் என்ன மோசடிகள் எல்லாம் நடைபெறுகிறது என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய இரண்டு நாடுகளிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள 39 வயதான தொழில்நுட்ப கோடீஸ்வரர் பாவெல் துரோவ் (Pavel Durov), கைது செய்யப்பட்டபோது தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் ஏறவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அஜர்பைஜானில் இருந்து பயணித்ததாகவும், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தனது சொந்த விமானத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெலெக்ராம் ஓனர் தனது சொந்த விமானத்தில் கைது.. இத்தனை குற்றசாட்டுகளா?

டெலெக்ராம் ஓனர் தனது சொந்த விமானத்தில் கைது:

TF1 இன் படி, பிரெஞ்சு அதிகாரிகள் துரோவை கைது செய்தனர். ஏனெனில் டெலிகிராம் மிதமான தன்மை மற்றும் சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைக்கவில்லை. போதைப்பொருள் கடத்தல், பீடோ கிரிமினல் (Pedo criminal) குற்றங்கள் மற்றும் மோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த ஆப்ஸ் உதவுவதாக கூறி, துரோவ் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரெஞ்சு எல்லைக்குள் நுழைந்தால் மட்டுமே இந்த கைது வாரண்ட் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

துரோவ் துபாயில் இருந்த வரை இந்த வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம் துரோவ் கைது குறித்து தெளிவுபடுத்துவதில் தீவிரமாக உள்ளது. துரோவ் 2014 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார், பின்னர் ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி தனது VK சமூக ஊடக தளத்தில் எதிர்க்கட்சி சமூகங்களை மூட மறுத்தார். அவர் இறுதியில் VK ஐ விற்றுவிட்டு துபாய்க்கு சென்றார்.

துபாயில் தான் டெலிகிராம் ஆப்ஸ் தளம் அமைந்துள்ளது. துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் ஆகியோர் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் ஆப்ஸை அறிமுகப்படுத்தினர். டெலெக்ராம் ஆப்ஸ் ஆனது இப்போது உலகளவில் ஏறக்குறைய சுமார் 900 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. இது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ்களை அனுப்ப அனுமதிக்கிறது.

ஒருவர் மீது இத்தனை குற்றசாட்டுகளா? என்ன காரணத்திற்காக கைது?

இந்த டெலெக்ராம் ஆப்ஸ் பிரபலமான போதிலும், டெலிகிராம் 2018 இல் ரஷ்யாவில் பயனர் தரவை ஒப்படைக்க மறுத்ததற்காக தடையை எதிர்கொண்டது. ஆனால், 2021 இல் தடை நீக்கப்பட்டது. இருப்பினும், டெலெக்ராம் தளத்தில் தொடர்ந்து பயங்கரவாதம், போதைப்பொருள், உடந்தை, மோசடி, பணமோசடி, திருடப்பட்ட பொருட்களைப் பெறுதல் மற்றும் பீடோ கிரிமினல் உள்ளடக்கம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த பல காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட பாவெல் துரோவ், விசாரணை நீதிபதியின் முன் விரைவில் ஆஜராவார் என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (இன்று) அல்லது நாளைக்குள் முதல் விசாரணை நிகழலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை துரோவ் கைது தொடர்பாக டெலிகிராம் நிறுவனம் இன்னும் எத்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது க்ருய்ப்பிடத்தக்கது. விசாரணை குறித்த தகவல்களை விரைவில் அப்டேட் செய்கிறோம். அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Telegram App CEO and Co Founder Pavel Durov Arrested In France
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X