Home
News

Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி.. மறைமுகமாக இருக்கும் சிக்கல்.. என்ன தெரியுமா?

டெலிகிராம் பயனர்களுக்கு நிறுவனம் இப்போது இலவசமாக பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இது இலவசமாக கிடைப்பதனால், மக்கள் இப்போது இந்த சந்தாவை பெற அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், இதற்கு பின்னணியில் மறைக்கப்பட்டுள்ள பேராபத்தை பற்றி அறியாமல் பிரீமியம் சந்தாவை பயன்படுத்த முன்வருகிறார்கள்.

வாட்ஸ்அப் போல டெலிகிராம் ஆபிஸையும் பல லட்சம் மற்றும் பல கோடி மக்கள் உலகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ்அப்பை விட இதில் பல அம்சங்கள் இருப்பதனால், மக்கள் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெரிய பைல்களை இதில் சுலபமாக அனுப்ப முடியும். அதேபோல், இந்த டெலிகிராம் சேவையை பயன்படுத்த உங்கள் மொபைல் எண்கள் தேவையில்லை என்ற பல நன்மைகள் இதில் இருந்து வருகிறது.

Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி..

டெலிகிராம் பயனர்களுக்கு இலவச பிரீமியம் சந்தா (Telegram free premium subscription):

இருப்பினும், வாட்ஸ்அப் உடன் ஒப்பிடுகையில், டெலிகிராம் ஆப்ஸ் இல் இருக்கும் பாதுகாப்பு மிகவும் குறைவானது. உண்மையை சொல்ல போனால் பயனர்களுக்கு டெலிகிராம் தளத்தில் பாதுகாப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். இது மறைமுகமாக நடக்கும் ஒரு சிக்கலாக இருக்கிறது. தற்போது டெலிகிராம் தனது பயனர்களுக்கு இலவச பிரீமியம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிகிராம் பிரீமியம் பயனர்கள் வழக்கமான பயனர்களை விட அதிக அம்சங்களை இதில் வழங்கும் என்பர் கூறப்பட்டுள்ளது.

டெலிகிராம் அனைத்து பயனர்களும் பிரீமியம் அம்சங்களை இலவசமாக அனுபவிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பியர்-டு-பியர் (pear-to-pear) உள்நுழைவு திட்டத்தின் மூலம் பயனர்கள் பிரீமியம் சேவைகளை இலவசமாக அனுபவிக்க முடியும். ஆனால் இதில் பெரிய ஆபத்து பதுங்கியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், பியர்-டு-பியர் உள்நுழைவு மூலம் டெலிகிராம் பிரீமியத்தை செயல்படுத்த ஒரு நிபந்தனையை முன்வைக்கின்றனர்.

இந்த உள்நுழைவு எஸ்எம்எஸ் குறியீடுகளை அனுப்ப உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த அனுமதித்தால், டெலிகிராம் இந்தத் திட்டத்தை அனுமதிக்கிறது. இந்த நிபந்தனையை ஏற்று மட்டுமே பயனர்கள் பிரீமியம் சேவைகளை அனுபவிக்க முடியும். இதன் ஆபத்து என்ன என்றால், மற்றொரு பயனர் பிரீமியத்தில் உள்நுழையும்போது, ​​அவர் உங்கள் எண்ணிலிருந்து OTP எண்ணை அனுப்புகிறார். இப்படி அந்நியர்களின் கைகளில் உங்கள் எண் இருந்தால், அது பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி..

பியர்-டு-பியர் அம்சம் ஏன் ஆபத்தானது?

இந்த முறைப்படி ஒரு பயனரின் எண்ணிலிருந்து அதிகபட்சம் 150 மெசேஜ் வரை அனுப்ப முடியும். டெலிகிராம் ஏற்கனவே சில நாடுகளில் பியர்-டு-பியர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த டெலிகிராம் முயற்சிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இந்த அம்சம் இந்தியாவுக்கு வந்தால் மக்கள் தொகை அதிகம் என்பதால் பலர் பாதுகாப்பு சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பணம் செலுத்தாமல் இலவசமாகக் கிடைப்பதால், பல பயனர்கள் அதைச் செயல்படுத்த வாய்ப்புள்ளது. Peer to Peer அம்சத்தின் மூலம் Telegram Premium பெறுவது உங்கள் தொலைபேசி எண்ணை பொது இடத்தில் எழுதி வைப்பது போன்ற ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மோசடி செய்பவர்களின் கையில் உங்கள் எண் கிடைத்தால், அது பண திருட்டு, தகவல் திருட்டு என்று பல மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆதார் மற்றும் வங்கி கணக்கு அனைத்தும் ஃபோன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதால் சில நேரங்களில் இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதையெல்லாம் புரிந்து கொண்ட பிறகு தான் பியர்-டு-பியர் மூலம் பிரீமியம் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Telegram Android Apps Free Premium Subscription Peer to Peer Login Program Dangers Users Privacy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X