மெசேஜ் செயலிகளை தடை செய்யும் எண்ணம் இல்லை: தொலைத்தொடர்பு துறை அறிவிப்பு.!
பொய்யான செய்திகளை தந்து செயலிகளை தவறாக பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை
பொய்யான செய்திகளை தந்து கொண்டிருந்தாலும் மெசேஜ் செயலிகளை தடை செய்யும் எண்ணம் இல்லை என்றும் இருப்பினும் தொழில்நுட்பம் மூலம் பொய்யான செய்திகளை தந்து செயலிகளை தவறாக பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க தேவையான முயற்சிகளை அரசு செய்து வருவதாக தொலைத்தொடர்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெலிகம் ஆஃப் டெலிகிராப் செயலாளர் அருணா சுந்தரராஜன் அவர்கள் கூறியபோது, "தொழில்நுட்ப தீர்வுகள்", மெட்டாடேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்டு இதற்கான தீர்வுகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை சம்பந்தப்பட்ட டெலிகாம் ஆப்பரேட்டர்களிடம் பொய்யான செய்திகளை பரப்பும் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்புவதை தடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, தனிப்பட்ட மொபைல் பயன்பாடுகளைத் தடுப்பது என்பது மிகவும் கடினமான பணி என்றும், போலி செய்திகளைக் கட்டுப்படுத்தவும், பொது ஒழுங்கை பராமரிக்கவும் அரசு "மிகவும் பயனுள்ள" நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த செவ்வாயன்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் வாட்ஸ் அப் சி.இ.ஓ கிறிஸ் டேனியல்ஸ் அவர்களை சந்தித்து இந்திய சட்டங்களுக்கு இணங்க, உடனடியாக செய்தி தளத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க "பொருத்தமான" நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கிற்ஸ் டேனியல் அவர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் நிச்சயம் போலி செய்திகள் பரவுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.


Click it and Unblock the Notifications