Home
News

TRAI-ன் அடுத்த அடி.. கட்டிடங்களுக்குள் நல்ல டிஜிட்டல் இணைப்பு தேவை.. இணைப்பு தரத்தை அதிகரிக்க அதிரடி முடிவு..

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) தற்போது, இந்தியாவில் உள்ள கட்டிடங்களுக்குள் நல்ல டிஜிட்டல் இணைப்பின் தேவை (good digital connectivity inside the buildings) மற்றும் டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துகளின் மதிப்பீட்டில் TRAI (TRAI's Regulation on Rating of Properties for Digital Connectivity) தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் இணைப்பின் செயல்பாட்டை கட்டிடங்களுக்குள் மேம்படுத்த TRAI திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, ஜனவரி 30, 2025 ஆம் தேதி அன்று ஒரு இணையவழி கருத்தரங்கை (webinar) நடத்தியது. இந்தக் கருத்தரங்கில், கட்டிடங்களுக்குள் டிஜிட்டல் இணைப்பின் முக்கியத்துவத்தை (importance of digital connectivity inside buildings) TRAI முக்கியமான மையமாகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அதிகாரிகள் (RERA) இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

TRAI-ன் அடுத்த அடி.. கட்டிடங்களுக்குள் நல்ல டிஜிட்டல் இணைப்பு தேவை..

TRAI-ன் அடுத்த அடி.. கட்டிடங்களுக்குள் நல்ல டிஜிட்டல் இணைப்பு தேவை:

TRAI இன் 'டிஜிட்டல் இணைப்பிற்கான சொத்துக்களின் மதிப்பீடு மீதான ஒழுங்குமுறை, 2024' குறித்தும் பேசப்பட்டது. இந்த நிகழ்விற்கு TRAI-ன் தலைவரான ஸ்ரீ அனில் குமார் லஹோட்டி தலைமை தாங்கினார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், TRAI தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உட்பட 116 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TRAI பேசிய தகவலின் படி, கட்டிடங்களுக்குள் இணைப்பு சிக்கல்களைத் தீர்ப்பதில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அதிகாரிகளான RERA வின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடப்பட்டது. குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களில் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்கு TRAI மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என்பது இந்த கலந்தாய்வில் கலந்துரையாடப்பட்டது.

RERA மற்றும் 2024 டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளின் ஆதரவுடன் TRAI:

டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு முறை குறித்த விவரங்களை TRAI வழங்கியது. மதிப்பீட்டு பண்புகளை ஈடுபடுத்த முன்வந்துள்ள மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான செயல்முறை மற்றும் டிஜிட்டல் தயார்நிலையை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்த தகவல்கள் இந்த அமர்வில் ஆலோசிக்கப்பட்டன. சொத்துக்கள் எவ்வாறு உயர் இணைப்புத் தரங்களை அடைய முடியும் என்பது பற்றிய விரிவான புரிதலை TRAI வழங்கியது.

நல்ல டிஜிட்டல் இணைப்பு செயல்படுத்தல் மற்றும் கட்டமைப்பு தொடர்பான RERA பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு TRAI அதிகாரிகள் பதிலளித்தனர், இது முன்மொழியப்பட்ட விதிமுறைகள் குறித்த தெளிவை உறுதி செய்தது. நாடு முழுவதும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான TRAI-யின் முயற்சிகளில் இந்த இணையவழி கருத்தரங்கு ஒரு முக்கிய பங்காக அமைந்துள்ளது. RERA மற்றும் 2024 இணைப்பு விதிமுறைகளின் ஆதரவுடன், TRAI டிஜிட்டல் சகாப்தத்திற்கு ஏற்றவாறு கட்டிடங்களை சிறப்பாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது இந்தியாவில் சொத்து மதிப்பீடுகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இதன் மூலம் வரும் காலங்களில் கட்டிடங்களுக்குள் டிஜிட்டல் இணைய இணைப்பு அம்சம் அடுத்தகத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றும், இதன் மூலம் மக்கள் பெரியளவில் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடங்களுக்குள் நல்ல டிஜிட்டல் இணைப்பு கிடைப்பதில் TRAI மும்முரமாக வேலை செய்து வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X