1ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் சிறந்த திட்டமா? அல்லது ஏர்டெல் சிறந்த திட்டமா?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்றும் பாரத் ஏர்டெல் நிறுவனம் அண்மையில் தங்களின் புதிய ப்ரீபெய்ட் திட்ட விபரங்களை வெளியிட்டிருந்தது. இருப்பினும் பயனர்களுக்கு எது சிறந்த திட்டம் என்ற குழப்பம் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர சரியானது போல் தெரிவவில்லை.

40 சதவீதம் விலை உயர்வு

40 சதவீதம் விலை உயர்வு

அண்மையில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் விலை பட்டியலை 40 சதவீதம் உயர்த்தியது. ப்ரீபெய்ட் பயனர்களுக்கு முன்பு 100 ரூபாயில் கிடைத்த பலன்கள் அனைத்தும் இப்பொழுது விலை அதிகரிக்கப்பட்டு 200 ரூபாய்க்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

1 ஜிபி டேட்டா கிடைக்கும் குறைந்த விலை திட்டம் எது?

1 ஜிபி டேட்டா கிடைக்கும் குறைந்த விலை திட்டம் எது?

குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்து பயன்படுத்திவந்த பயனர்களுக்கு எந்த திட்டத்தை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் மற்றவர்களைவிட சற்று அதிகமாக தான் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரத் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும் குறைந்த விலை திட்டங்களில் எது சிறந்து என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

ஜியோவில் குறைந்த விலை திட்டம் எது?

ஜியோவில் குறைந்த விலை திட்டம் எது?

ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களின் பட்டியலில் மிக குறைந்த விலை கொண்ட திட்டம் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் மட்டும் தான். ஜியோ திட்டங்களில் பல திட்டங்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை கொண்டிருந்தாலும் கூட, பட்ஜெட் விலையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் ஒரே திட்டம் இந்த ரூ.149 திட்டம் மட்டுமே.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான 300 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் ஜியோ - ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம் எனஒட்டுமொத்தமாக 24 நாட்கள் வேலிடிட்டியுடன் இத்திட்டம் வழங்கப்படுகிறது.

இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!

ஜியோவின் குறைந்த விலை திட்டத்திற்கு போட்டியான ஏர்டெல் திட்டம் எது

ஜியோவின் குறைந்த விலை திட்டத்திற்கு போட்டியான ஏர்டெல் திட்டம் எது

ஜியோவின் ரூ.149 திட்டத்திற்கு போட்டியாக 1 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.219 திட்டம் மட்டும் தான். ஜியோவின் ரூ.149 திட்டத்தை விட ரூ.60 கூடுதலாக உள்ளது என்றாலும் இதில் பயனர்களுக்கு கூடுதலாக சில நன்மைகளும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஜியோவுடன் ஒப்பிடுகையில் 4 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் அனைத்து வாய்ஸ் கால் அழைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக கிடைக்கிறது. இத்துடன் ரூ.150 மதிப்பிலான ஃபாஸ்ட்டேக் கேஷ்-பேக் சலுகை, 4 வார ஷா-அகாடமி கோர்ஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் சந்தாவும் வழங்கப்படுகிறது.

முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்புமுதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு

தேவைக்கு ஏற்றார் போல் திட்டம்

தேவைக்கு ஏற்றார் போல் திட்டம்

இரண்டு திட்டங்களையும் ஒப்பிடும் போது, பயனர்களின் தேவைக்கு ஏற்றார் போல் திட்டங்களின் பயன்களும் மாறுகிறது. குறைந்த விலையில் டேட்டா பயன் மட்டும் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு ஜியோவின் ரூ.149 திட்டம் சரியான திட்டமாக இருக்கும், ஆனால் இதில் கொடுக்கப்பட்டுள்ள 300 வாய்ஸ் கால நிமிடங்கள் முடிந்த பின் நீங்கள் செய்யும் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்று கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏர்டெல் சிறந்த திட்டம்

ஏர்டெல் சிறந்த திட்டம்

அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.219 திட்டத்தை ஜியோவுடன் ஒப்பிட்டால் கூடுதலாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. டேட்டா சேவையுடன் இதில் பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவை கிடைக்கிறது. ஜியோவை விட இதன் வேலிடிட்டியும் 4 நாட்கள் கூடுதலாக உள்ளது. இத்துடன் ஏர்டெலின் கூடுதல் சேவைகளும் கிடைக்கிறது. கூடுதல் சேவைகளை விரும்பும் பயனர்கள் நேரடியாக ஏர்டெலின் இந்த திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Telecom Operators Offering 1GB Data Plans Is Jio Prepaid Has The Best Plan Or Airtel Has The Best Plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X