முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!

|

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைனவ் சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார்.

சமீபத்தில் பிரதமர் மோ

5ஜி சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்னோட்டமாக, சமீபத்தில்பிரதமர் மோடி இந்தியாவின் முதல் 5ஜி அலைவரிசை சோதனை களத்தை சென்னை ஐஐடியில் தொடங்கி வைத்தார்.

உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!

தொழில்நுட்பத்துறை அமைச்சர்

பின்பு மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை வெற்றிகரமாகசோதனை செய்தார். அதாவது அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ்,தனது போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து பரிசோதித்தார்.

அடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோஅடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோ

மேலும் இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளது என்னவென்றால், முழுக்க முழுக்க இந்தியாவின் தொழில்நுட்பத்தில் 5ஜி
தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ்,
இது பிரதமரின் கனவு,அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார்.
பின்பு இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும் என்றார்.

"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!

ந்தியா முழுவதும் 13 நகரங்களில்

அதேபோல் இந்தியா முழுவதும் 13 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவை துவங்கப்படும் எனக் கூறிய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பி.டி.வகேலா, அதன்பின்பு படிப்படியாக நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!

வில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான

குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் வரும் ஜூன் முதல் ஜூலை மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு
வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!

லைத் தொடர்பு ஒ

டிராய் என்று அழைக்கப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. குறிப்பாக இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சுட்டிக்காட்டி அந்த கட்சியை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.

பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!

 தொலைத் தொடர்பு ஒழுங்குமு

குறிப்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியல் பேசிய மோடி, கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில்ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். பின்பு 2ஜி சகாப்தம் என்பது ஊழலின் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது பயன்படுத்தும் 4ஜி நாடுவெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள ஏதுவாக உள்ளது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்ப சேவையை
பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Telecom minister successfully tested 5G audio and video call: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X