பிராட்பேண்ட் சேவை வெளிப்படையாக இருக்க வேண்டும்: டிராய் உத்தரவு

Posted By: Staff
பிராட்பேண்ட் சேவை வெளிப்படையாக இருக்க வேண்டும்: டிராய் உத்தரவு

அகன்ற அலைவரிசை(பிராட்பேன்ட்) சேவை வழங்குவதில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்று மத்திய தொலை தொடர்பு ஆணையம்(டிராய்) அறிவுறுத்தியுள்ளது.

பிராட்பேண்ட் சேவையை பற்றி நுகர்வோர் மற்றும் நுகர்வோர் ஆணையத்திடம் இருந்து வரும் புகார்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரியாக பொருட்படுத்துவது இல்லை என்று புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் நுகர்வோருக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே இருக்கக் கூடிய தொழில் நுட்ப சேவைகளின் புதிய வசதிகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் அறிவித்துள்ளது.

அதாவது பிராட்பேண்டு சேவையை பொருத்தவரையில் நாளக்கு நாள் புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.  மேலும், வாடிக்கையாளர்களிடம் திட்டங்களை பற்றி தெளிவாக கூறாமல், கட்டண வருவாயை கருத்தில்கொண்டு மட்டும் செயல்படுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.

இதுபோன்று, தாங்கள் ஏமாற்றப்படுவதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக வரும் புகார்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் இஷ்டம்போல் செயல்பட்டு வருகின்றன. இனி இதுபோன்று இல்லாமல் அகன்ற அலைவரிசை திட்டங்கள் குறித்து தெளிவான விபரங்களை அளிக்கவேண்டும்.

மேலும், அகன்ற அலைவரிசை சேவையில் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் மற்றும் நுகர்வோர் ஆணையத்திடம் இருந்து நிறைய புகார்களும் எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய தொலை தொடர்பு ஆணையம் நுகர்வோர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையே எல்லா தகவல்களும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதை ஒருநேரடி தகவலாக கூறியிருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்