மீண்டும் திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிடும் டெலிகாம் நிறுவனங்கள்.! ஆன்லைனின் கசிந்த தகவல்?

|

ஜியோ, ஏர்டெல்,வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்களின் 5ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள்து சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

 தகவலின்படி

சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

வாடிக்கையாளர்களிடம் இருந்து

குறிப்பாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்தும் முயற்சியாக இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

 விலை உயர்வு அமலுக்கு வந்தாலும்

அதேபோல் விலை உயர்வு அமலுக்கு வந்தாலும் இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊராக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த மூன்று நிறுவனங்களும் ஒவ்வொரு
வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ.329 விலையில் 1000 ஜிபி டேட்டாவா? BSNL வழங்கும் இன்னும் ஏராளமான திட்டங்கள் லிஸ்டில் இருக்கு..ரூ.329 விலையில் 1000 ஜிபி டேட்டாவா? BSNL வழங்கும் இன்னும் ஏராளமான திட்டங்கள் லிஸ்டில் இருக்கு..

ர்டெல் நிறுவன தலைமை செயல்

சமீபத்தில் ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம்என்று கூறி இருந்தார். எனவே இனி வரும் மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலை உயர்வு இருக்காது. அதன்பின்பு உயர்த்தப்படஅதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.399 மற்றும் ரூ.833 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைஇப்போது பார்ப்போம்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த புதிய திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த புதியரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெறமுடியும். இதுதவிர Airtel Thanks நன்மைகளையும் வழங்குகிறது இந்த புதிய திட்டம்.

Best Mobiles in India

English summary
Telecom companies are likely to raise tariffs by Diwali 2022: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X