2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?

|

இந்தியாவின் முதல் தனியார் ரயில், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், சனி-ஞாயிறு ஆகிய மூன்று பயணங்களின் போது 2.5 மணி நேரம் தாமதமானது, இதன் காரணமாக ஐஆர்சிடிசி முதல் முறையாக அதிகபட்சமாக 2035 பயணிகளுக்கு சுமார் ரூ. 4.5 லட்சம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. தேஜாஸ் தனியார் ரயில் தாமதமான காலத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு இந்த இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த இழப்பீடு தொகை தெரியுமா?

 2.5 மணி நேரம் தாமதமாக வந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

2.5 மணி நேரம் தாமதமாக வந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) சென்ற வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாமதமாகச் சென்றது. இதனால் அந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த 2,035 பயணிகளும் ரயிலின் வருகைக்காக அவர்களின் ரயில் நிலையத்தில் 2.5 மணி நேரம் காத்திருக்க வேண்டியது ஆனது. நேரம் பொன்னானது என்பது இப்போது முதல் முறையாக இந்தியாவில் நிரூபணம் ஆகியுள்ளது.

லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸும் 1 மணி நேரம் தாமதம்

லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸும் 1 மணி நேரம் தாமதம்

தேஜஸ் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை பலத்த மழைக்குப் பிறகு புதுடெல்லி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாகச் சென்றது. இதனால் அந்த ரயிலில் பயணிக்கும் பயனர்கள் காத்திருக்க வேண்டியதானது. ஞாயிற்றுக்கிழமையில் கூட, லக்னோ-டெல்லி சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளும் காத்திருக்க வேண்டியது ஆனது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்புஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்பு

ஒரு மணி நேரத்திற்கு இழப்பீடு எவ்வளவா? அப்போ இரண்டு மணி நேரத்திற்கு எவ்வளவு?

ஒரு மணி நேரத்திற்கு இழப்பீடு எவ்வளவா? அப்போ இரண்டு மணி நேரத்திற்கு எவ்வளவு?

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஒரு தனியார் ரயில் என்பதனால் இதில் ஏராளமான தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளது. இதில் ரயில் தாமதமானால் பயணிகளுக்கு நிறுவனம் அபராதம் செலுத்தும் அம்சமும் இதில் உள்ளது. இந்த அம்சத்தின் படி, ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக வருவதற்கு ரூ. 100 இழப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல், இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக ரயில் வந்தால் ரூ. 250 இழப்பீடு வழங்கப்படும் என்று விதி உள்ளது.

IRCTC பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

IRCTC பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

இந்த பிரத்தியேக விதி காரணமாக அந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு தற்போது IRCTC பயணிகளுக்கு இழப்பீடாக ரூ. 4,49,600 திருப்பிச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. ஐஆர்சிடிசி தலைமை மண்டல மேலாளர் அஜித்குமார் சின்ஹா கூறுகையில், "முதல்முறையாக 1,574 பயணிகளுக்கு ரூ. 3,93,500 திரும்பத் தரப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை பயணத்தை 561 பயணிகளுக்கு ஒரு மணி நேரத் தாமத கட்டணமாக ரூ. 100 வழங்கப்பட்டுள்ளது.

முயற்சி போதும் சார் எல்லாம் சாத்தியம்- பாலைவனத்தில் வளரும் மரங்கள்: அனைத்தும் இமைக்கா கண்கள் போல் வட்ட வடிவம்!முயற்சி போதும் சார் எல்லாம் சாத்தியம்- பாலைவனத்தில் வளரும் மரங்கள்: அனைத்தும் இமைக்கா கண்கள் போல் வட்ட வடிவம்!

சிக்னல் கோளாறு காரணமாக பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்

சிக்னல் கோளாறு காரணமாக பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்

இந்த வழியில், மொத்தம் 2,035 பயணிகளுக்கு இழப்பீடாக ரூ. 4,49,600 வழங்கப்படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.IRCTC படி, தேஜாஸ் எக்ஸ்பிரஸ் லக்னோ சந்திப்பில் இருந்து சனிக்கிழமை காலை 6:10 மணிக்கு திட்டமிட்ட நேரத்தில் புறப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக, ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புதுடெல்லி நிலையத்தை அடைந்தது.

இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!

யாருக்கெல்லாம் இந்த இழப்பீடு தொகை கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த இழப்பீடு தொகை கிடைக்கும்?

அதே நேரத்தில் லக்னோ செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமானது. சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்ட சிக்கலால் சனி மற்றும் ஞயிற்றுக்கிழமையில் பயணித்து பயணிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தாமதமாக வந்த ரயிலில் பயணித்த பயணிகளில் இழப்பீடிற்காக கிளைம் செய்த பயனர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படுகிறது. சுமார் 98 சதவீத பயணிகள் ஏற்கனவே கிளைம் செய்துவிட்டனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tejas Express Train Delayed By 2 Hours IRCTC To Pay Over Rs 4 Lakh Compensation To Passengers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X