Home
News

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நடப்பட்ட தீவிர சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ் நபர்களைக் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவன் 17 வயதே ஆனா இளம் சிறுவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பல்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பல்

கைது செய்யப்பட்ட சல்மான் கான், ஃபாஹத் ஷா, ஜமீன் குடபடி, மொஸ்சென் கான், முகம்மது மஸர் ஷேக், டாக்கி கான், சர்ஃபராஸ் அஹமது, ஸாஹித் ஷேக் மற்றும் 17 வயதான சிறுவன் என அனைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சகோதரர்கள்

சகோதரர்கள்

இந்த இளைஞர்களில் சல்மான், மொஹெசென் மற்றும் டாக்கி என்ற மூன்று பேர் சகோதரர்கள் ஆவர். இளைஞர்களைத் தேடி, அவர்களைப் பணியமர்த்துபவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹார்ட் டிரைவ், செல் போன், சிம் கார்டு பறிமுதல்

ஹார்ட் டிரைவ், செல் போன், சிம் கார்டு பறிமுதல்

இவர்களை ஒருவாரமாக நோட்டம்விட்டு வந்த அதிகாரிகள் நேற்று அதிகாலை ஒரே நேரத்தில் 9 பேரின் இருப்பிடத்தில் சோதனை செய்து கைது செய்துள்ளார். இவர்களிடமிருந்து ரசாயனங்கள் பவுடர், ஹார்ட் டிரைவ், செல் போன், சிம் கார்டு, அமிலம், கத்தி எனப் பல பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அனைவரும் பட்டதாரிகள்

அனைவரும் பட்டதாரிகள்

இவர்கள் அனைவரும் கணினி பொறியியலாளர், சிவில் பொறியாளர் மற்றும் மருத்துவ பிரதிநிதி எனப் பல முன்னணி தனியாரின் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் 17 வயது சிறுவன் மின்னணு மற்றும் சைபர் விஞ்ஞானத்தில் டிப்ளமோ முடித்த பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப் மற்றும் டார்க் நெட்

வாட்ஸ் ஆப் மற்றும் டார்க் நெட்

இவர்களின் வாட்ஸ் ஆப் மற்றும் ஸ்னாப்சாட்டிலிருந்த பல சாட்கள் மற்றும் அவர்களின் மின் அஞ்சல்களையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் டார்க் நெட் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Teenager among nine arrested in Maharashtra for alleged ISIS links : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X