19 வயதில் 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் முதலாளியான இந்திய மாணவர் .!
செய்யும் வேலைக்கு பலன் உண்டு என்பார்கள் அது உண்மை தான், அதற்கு பொருத்தமானவர் தான் 19 வயது ஹர்ஷ் டலால் (Harsh Dalal). இவர் 13 வயதில் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய, திரையை பதிவு செய்யும் மொபைல் செயலி ஆனது ஒரு சில வாரங்களில் 5 மில்லியன் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

ஆனால் அந்த செயலி பிரபலமடையும் என்பதை எதிர்பார்க்காத ஹர்ஷ் டலால்,அதில் அதிகப் பணம் ஈட்டும் வாய்ப்பை தவறவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட டலால் Team Labs என்ற சொந்த நிறுவனம் ஒன்றைத் துவங்கி அதன் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, Coca-Cola Company, Google, Hilton போன்ற நிறுவனங்கள் அவரது நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூரில் diploma in business administration பயிலும் டலால்,படிப்பையும் சமாளித்துக்கொண்டு எட்டு நகரங்களில் பணிபுரியும் 120 ஊழியர்களையும் நிர்வகித்து வருகிறார்.

6 வயதில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த டலால், அடிக்கடி வீடு மாறியதாக CNA Insider இடம் தெரிவித்தார். அதன்படி ஒவ்வொரு முறை இடம் மாறும்போதும், அந்த பகுதியில் வசித்து வந்த நண்பர்களை இழந்ததாக் கூறினார். பின்பு விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல், மடிக்கணினியில் அதிக நேரம் செலவிட்டதாகக் கூறினார்.

அதேபோல் 11 வயதில் YouTube வீடியோக்களை பார்த்தே, கணினியின் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொணடார் டாலல். பின்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் கட்டமைப்பில் அதிக ஆர்வம் இருந்ததால், அதன் தொடர்பிலான இணைய உரையாடல் தளங்களில் அதிக நேரம் செலவிட்டார்.

மேலும் இவரது 16 வயதில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு செயலி உருவாக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இதை நண்பர்கள் உதவியுடன் வெற்றிகரமாக முடித்து, 100,000 டாலர் மதிப்புமிக்க வருமானம் பெற்றுள்ளனர்.

பின்பு 2017-ம் ஆண்டு மற்ற நிறுவனங்களுக்கு சேவைகளை உருவாக்குவதற்கு பதிலாகச் சொந்தமாக, Xenon என்ற மென்பொருள் தளத்தைத் தொடங்கினார். தற்போது அதைச் சுமார் 70,000 பேர், பயன்படுத்தி வருகின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஆரம்பத்தில் தளத்திற்கான முதலீட்டைத் திரட்டுவதில் சிரமப்பட்டார் டலால், பின்பு மனம் தளராமல் முயன்ற அவர், அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் முதலீடு பெற்றார். தற்போது அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழலுக்கு ஏற்ப, புதுவித மென்பொருளை உருவாக்கி வருகிறார் டலால்.

இருந்தபோதிலும் நோய்ப்பரவலுக்கு முன் சுமார் 25 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட டலாலின் நிறுவனம் தற்போதைய சூழலில் இழப்பைச் சந்தித்து வருவதாக ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications