உயிர் வாழலாமா? வேண்டாமா? 16 வயது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பதிவினால் நேர்ந்த சோகம்.!

மலேசியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத 16 வயது சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் கருத்தைக் கேட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

|

மலேசியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத 16 வயது சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் கருத்தைக் கேட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அச்சிறுமி தனது இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் இல் தான் உயிர் வாழலாமா அல்லது இறந்து விடலாமா என்று போல்(poll) பதிவு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களில் 69% நபர்கள் உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.

உயிர் வாழலாமா?வேண்டாமா?இன்ஸ்டாகிராம் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் வேடிக்கையாக நினைத்து உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்ததினால், மனம் உடைந்த அச்சிறுமி தற்கொலைக்கு முயன்று உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் அனைத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

உயிர் வாழலாமா?வேண்டாமா?இன்ஸ்டாகிராம் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

இதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் பதிவிற்கு வாக்களித்த அனைவரும் அப்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என்பதனால், அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கை வாதாடிய வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் மரணத்திற்கும், அவரின் குடும்பத்தினருக்கும் வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் தீவிரமாக இன்ஸ்டாகிராம் கண்காணிக்கும் என்றும் அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Teenage girl kills herself after Instagram poll in Malaysia : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X