எச்சில் துப்பி பாஸ்வோர்ட் போட்டா போன் அன்லாக் ஆகுமா? நெட்டிசன்களை வியக்க வைத்த இளம் பெண்..

|

ஸ்மார்ட்போன்களை நம்பர்லாக் கொண்டோ, ஃபேஸ் லாக் கொண்டோ, அல்லது விரல் ரேகை மூலமோ எளிமையாக அன்லாக் செய்யும் வழி உள்ளது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னுடைய ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய வேண்டி ஈடுபட்ட விஷயம் தற்போது இணையத்தில்
அதிக வைரலாகி வருகிறது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வில் உள்ள மியாமி மாகாணத்தில்

அமெரிக்காவில் உள்ள மியாமி மாகாணத்தில் வசித்து வருபவர் தான் மிலா மோனாட். இந்த இளம் பெண் தன்னுடைய தோழிகள் சிலருடன் இணைந்து,விடுதி ஒன்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்தசமயம் அங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் சூழ்ந்து இருக்க, மிலா மோனாட்ஒரு வினோதமான காரியத்தை செய்துள்ளார்.

மிலா தன்னுடைய ஸ்மார்ட்போனை

அதாவது மிலா தன்னுடைய ஸ்மார்ட்போனை வெளியே எடுத்து, பாஸ் வேர்டு எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு எண்ணின் மீதும், வரிசையாக, அதுவும் சரியாக தன்னுடைய உமிழ் நீரை (Saliva) துப்ப தொடங்குகிறார். குறிப்பாக ஆறு எண்ணகள் மீதும் வரிசைப்படி மிலா எச்சில்
துப்ப, போனும் சரியாக அன்லாக் ஆகிறது.

அந்த ஸ்மார்ட்போன் சரியாக திறந்தது, மேலே தலையை தூக்கி சுற்றி இருந்தவர்களை பார்த்து சிரித்த மிலா, தனது வாயில் ஓரத்தில் இருந்த எச்சிலையும் துடைக்கிறார். மேலும் இந்த நிகழ்வினை அங்கு இருந்து யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து,அதனை இணையத்தில் வெளியிட, இணையத்தில் வைரலாக தொடங்கியது. குறிப்பாக அந்த பெண்ணின் இந்த வினோதமான செயல் பற்றி,பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இணையத்தில்

அதேபோல் சமீபத்தில் கேமரா ஒன்றினை சுறா விழுங்க முயற்சி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடலில் காணப்படும் மீன் இனங்களில் மிகவும் முக்கியமானது சுறா மீன்கள். குறிப்பாக சுறா மீன்களின் கோரை பற்களை கண்டு பயப்படாத ஆட்களே இருக்க முடியாது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. இப்படி பல சிறப்ப அம்சங்களை கொண்ட ஜாம்பவானாக திகழும் சுறா மீன்களை படம் பிடிக்க சென்ற ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது டைகர் சுறாமீன் ஒன்று.

லைதளங்களில் வைரலாக பரவிவரும் ஒரு

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் ஒரு வீடியோவில், சுறா மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்துகின்றன. குறிப்பாக கீழ்புறத்தில் இருந்து மிகவும் துல்லியமாக படமெடுத்துக் கொண்டிருந்த இன்ஸ்டா 360 கேமராவை ஒரு டைகர் சுறா பார்க்கிறது.ஒரு கட்டத்தில் இந்த கேமராவை சிறய மீன் என நினைத்ததோ அல்லது எதிரியென நினைத்ததோ தெரியவில்லை, அந்த கேமராவை லபக் என்று விழுங்க சுறா முயற்சித்தது. இது மட்டும் வீடியோவில் தெளிவாக பதிவாக இருக்கிறது.

5 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த டைகர் சுறா மீன்கள் அதிகமாக பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக பக்கவாட்டில் இருக்கும் வரிகள் காரணமாக இந்த சுறாக்களுக்கு டைகர் என்று பெயர் வந்திருக்கிறது. மேலும் 600 கிலோ வரையில் எடை கொண்ட இந்த வகை சுறா மீன்கள் வேட்டையாடுவதில் மிகுந்த திறமை கொண்டவை. மேலும் கூர்மையான கோரை பற்களால் இரையை பிடித்து உண்ணும் வழக்கம் கொண்டவை இந்த டைகர் சுறாக்கள். இதேபோலத் தான் அந்த கேமராவையும் பிடித்திருக்கிறது டைகர் சுறா. குறிப்பாக ஸிமி தா கிட் என்பவர் இந்த பகிர்ந்த இந்த வீடியோவில், கேமராவை லபக் என்று கவ்விய சுறா அதனை கடிக்கப் பார்க்கிறது. பின்பு கேமராவை உள்ளே விழுங்க முயற்சித்தபோது சுறாவின் வாய்க்குள் இருக்கும் பிரம்மாண்ட சதை மடிப்புகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

Best Mobiles in India

English summary
Teen unlocking a smartphone using saliva: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X