ஃப்ரீ பையர் கேமில் ரூ.90,000 காலி செய்த 12 வயது சிறுவன்: பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை!

|

12 வயது சிறுவன் பெற்றோரின் ஏடிஎம் கார்டை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து மொபைல் கேமில் அடுத்தக்கட்டம் செல்வதற்கு ரூ.90 ஆயிரத்தை காலி செய்துள்ளான்.

நாடு முழுவதும் தளர்வுகளோடு ஊரடங்கு

நாடு முழுவதும் தளர்வுகளோடு ஊரடங்கு

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர்.

பிரதானமாக இருந்த பப்ஜி விளையாட்டு

பிரதானமாக இருந்த பப்ஜி விளையாட்டு

ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்தது. பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டனர். பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொண்டார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை

பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை

பப்ஜியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பெற்றோர்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி வந்தனர். இந்த நிலையில்தான், பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பப்ஜி தடையால் ஏணையோர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதில் ஒருவர் பப்ஜி தடை செய்யப்பட்டதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலையே செய்து கொண்டார்.

ஃப்ரீ ஃபயர் விளையாட்டு

ஃப்ரீ ஃபயர் விளையாட்டு

இதையடுத்து ஃப்ரீ ஃபயர் என்ற இந்த கேம் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. இதுவும் PUBG கேமிற்கான ஒரு நல்ல மாற்றாகும். பப்ஜி போல் நீண்ட நேரம் இல்லாமல், குறுகிய நேரத்தில் பப்ஜி கேம் போன்ற அனுபவத்தை அனுபவம் இதில் கிடைக்கும். இந்த கேமில் ஒவ்வொரு சுற்றும் வெறும் 10 நிமிடம் மட்டுமே இருக்கும். பப்ஜிக்கு அடுத்தப்படியாக ஃப்ரீ பயர் கேம் பிரபலமடைந்து வருகிறது.

ரயில் கழிவறையில் மாணவியின் அலறல் சத்தம்: ஆபாசமாக படம் எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!ரயில் கழிவறையில் மாணவியின் அலறல் சத்தம்: ஆபாசமாக படம் எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!

பாஸ்புக் எண்ட்ரியில் இருப்புத் தொகை குறைவு

பாஸ்புக் எண்ட்ரியில் இருப்புத் தொகை குறைவு

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வங்கிக்கு சென்று பாஸ்புக் எண்டரி போட்டுள்ளார். அப்போது அதில் 90 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்துள்ளது.

ஃப்ரீ பயர் கேம் விளையாட்டுக்கு பணம்

ஃப்ரீ பயர் கேம் விளையாட்டுக்கு பணம்

வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கி அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். சோதித்து பார்த்த வங்கி ஊழியர், ஃப்ரீ பயர் கேம் விளையாட்டுக்கு பணம் செலவிட்டுள்ளதாக கூறினார்.

வங்கியில் இருந்து வந்த மெசேஜ்

வங்கியில் இருந்து வந்த மெசேஜ்

வங்கியில் இருந்து பணம் எடுத்திருந்தால் மெசேஜ் வந்திருக்குமே என செந்தில்குமார் வங்கி அதிகாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு கண்டிப்பாக மெசேஜ் வரும் என வங்கி அதிகாரி கூறியுள்ளார். செல்போனை செக் செய்து பார்க்கும்படி வங்கி ஊழியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஃப்ரீபயர் கேம் விளையாட்டு

ஃப்ரீபயர் கேம் விளையாட்டு

செல்போனில் மெசேஜ் இல்லை என்ற நிலையில் தனது மகன் எப்போதும் செல்போனும் கையுமாக இருந்தது செந்தில்குமாருக்கு நியாபகம் வந்துள்ளது. இதையடுத்து தனது 12 வயது மகனை அழைத்து விசாரித்தபோது, தான் தொடர்ந்து ஃப்ரீபயர் கேம் விளையாடி வந்ததாகவும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வதற்கு செல்லவேண்டும் என ஏடிஎம் கார்ட் மூலம் ரூ.90 ஆயிரம் செலவழித்ததாகவும் ஒப்புக் கொண்டான்.

90 ஆயிரம் வரை எழுதச் சொன்ன பெற்றோர்

90 ஆயிரம் வரை எழுதச் சொன்ன பெற்றோர்

அதோடு மொபைலுக்கு வந்த எஸ்எம்எஸ்களையும் உடனுக்குடனே அழித்துள்ளான் என்பதும் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த சிறுவனை 1,2,3 என வரிசையாக 90 ஆயிரம் வரை எழுதச் சொல்லி உள்ளனர். 3 ஆயிரம் வரை எழுதிய சிறுவன் கைவலிக்கிறது என கூறியுள்ளான். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் குழந்தைகளை கவனமாக கையாள வேண்டியது பெற்றோர்கள் கடிமையாகும்.

Best Mobiles in India

English summary
Teen spent Rs.90,000 in FreeFire mobile game from Parent bank account

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X