பப்ஜியை விட்டுட்டு படிப்ப பாருப்பா: கண்டித்த தந்தை-துப்பாக்கியை எடுத்த மகன்.,என்ன நடந்தது தெரியுமா?

|

பப்ஜி விளையாடதே என 20 வயது மகனை தந்தை கண்டித்ததால் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து வருகிறது.

தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர்

தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர்

இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். தங்களது பொழுதை எவ்வாறு செலவிடுவது என்று அறியாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர். ​​இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை கேமில் செலவிட்டு வருகின்றனர்.

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

அதேபோல் நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது நேரத்தை ஆன்லைனில் செலவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பப்ஜி, கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகள் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நேரத்தை செலவிடும் நபர்கள் அதிகம் என்று கூறினால் அது மிகையல்ல.

மொபைல் போனில் நேரத்தை செலவிடும் நபர்கள்

மொபைல் போனில் நேரத்தை செலவிடும் நபர்கள்

இந்த கொரோனா தாக்குதல் ஊரடங்கு நேரத்தில் பலரும் தங்களது நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்று தவித்து வரும் நிலையில் அதில் தங்களது நேரத்தை பப்ஜி விளையாட்டில் செலவிட்டு வருகின்றனர். இந்த கேமில் அதிகம் பணம் இழந்த நிகழ்வும், பப்ஜி அழுத்தம் தாங்காமலும், பப்ஜி விளையாடக் கூடாது என வீட்டில் கண்டித்ததாலும் உயிரிழந்த சம்பவமும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

வானில் நிகழ்ந்த அதிசயம்.! சரியான நேரத்தில் பதிவு செய்த இசைக் கலைஞர்.!வானில் நிகழ்ந்த அதிசயம்.! சரியான நேரத்தில் பதிவு செய்த இசைக் கலைஞர்.!

சீன ஆப்களுக்கு இந்தியா தடை

சீன ஆப்களுக்கு இந்தியா தடை

சீன ஆப்களை இந்தியா தடை செய்த பின்பு பப்ஜி மொபைல் கேமும் தடை செய்யப்படுமா என்ற கேள்வி தான் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்னும் பப்ஜி கேமிற்கு தடை வரலையா என்று சில பெற்றோர்கள் குமுறுவதும் நமக்கு கேட்கிறது. அதேபோல் சீன செயலிகளின் தனியுரிமை பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தும் 250-க்கும் மேற்பட்ட செயலிகளில் பப்ஜியும் இடம்பெற்றுள்ளது. இதனால் தடை செய்ய வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

மானிக் ஷர்மா பிபிஏ படிப்பு

மானிக் ஷர்மா பிபிஏ படிப்பு

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் வசித்து வருபவர் சந்தர் சேகர் ஷர்மா. இவரது 20 வயது மகன் மானிக் ஷர்மா பிபிஏ படிப்பு படித்து வருகிறார். இவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுநேரமும் செல்போனில் கேம் விளையாடுவதில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இதை பார்த்த அவரது தந்தை விளையாட்டை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தும்படி கண்டித்துள்ளார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை

மன அழுத்தம் காரணமாக தற்கொலை

இதனால் மானிக் ஷர்மா மன அழுத்தம் காரணமாக தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து படிப்பில் கவனம் செலுத்தாமல் பப்ஜி போன்ற விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார் என தான் கண்டித்தாகவும் அதனால் இப்படி நடந்தவிட்டதாகவும் அவரது தந்தை வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Teen Shot himself the reason of father told to stop play pubg game

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X