நடுவானில் வெடித்து சிதறிய ஐபோன், கதிகலங்கிய விமான பயணிகள்.!!

By Meganathan
|

அவ்வப்போது ஐபோன் கருவிகள் வெடித்து சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவது ஒன்றும் புதிதல்ல. சில முறை பயனர்களின் கவன குறைவினாலும், சில முறை கருவியில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் ஐபோன்கள் வெடித்திருக்கின்றது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஐபோன் வெடிப்பு சம்பவங்கள் பெரும்பாலும் பயனர்களின் வீடு, தோட்டம், அலுவலகம் என எங்கு நடந்தாலும் அவர்களுக்கு மட்டும் தான் பிரச்சனை, ஆனால் நடுவானில் பறக்கும் விமானத்தில் ஐபோன் வெடித்ததால், அதில் பயணம் செய்த சுமார் 163 பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஐபோன் 6

ஐபோன் 6

வாஷிங்டன் நகரின் பெல்லிங்ஹம் நகரில் இருந்து ஹவாய் நோக்கி பறந்து கொண்டிருந்த அலாஸ்கா ஏர் விமானத்தில் ஐபோன் 6 கருவி திடீரென வெடித்து சிதறியது விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்னா கிரெயில் என்பவர் பயன்படுத்திய ஐபோன் கருவி வெடித்ததில் கருவியில் உடனடியாக தீப்பிடித்தது.

கருத்து

கருத்து

'ஐபோன் கருவியில் படம் பார்த்து கொண்டிருந்தேன், திடீரென கருவி வெடித்து அதில் இருந்து சுமார் 8இன்ச் அளவுக்கு தீ பரவியதும், அதனினை தரையில் போட்டு விட்டேன்', என கிரெயில் தெரிவித்திருந்தார்.

ஹோனோலுலு

ஹோனோலுலு

ஐபோன் வெடிக்கும் போது விமானம் பசிபிக் கடலில் ஹோனோலுலு என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தது. வெடித்த ஐபோன் கருவியின் தீ உடனடியாக அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன் எச்சரிக்கை

முன் எச்சரிக்கை

விமான பயணங்களின் போது கருவியை ஏர்பிளேன் மோடில் வைப்பசு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உதவும். இது குறித்து கருத்து தெரிவிக்க ஆப்பிள் மற்றும் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Teen's iPhone 6 bursts created Panic at 30000ft Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X