TV சாம்ராஜ்யமே மிரளுது.. ரூ.6,999 க்கு 200 இன்ச் ப்ரொஜெக்டர்.. 4K டீகோடிங்.. 8 ஜிபி மெமரி.. எந்த மாடல்?
அடிமட்ட பட்ஜெட்டில் 200 இன்ச் ப்ரொஜெக்சன் கொண்ட மாடலாக டெக்சோக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் (TecSox Aura Projector) இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. 4K டீகோடிங், 200 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ், டூயல்-பேண்ட் வை-பை போன்ற பீச்சர்களில் கஸ்டமர்களை தட்டித் தூக்குகிறது. இந்த டெக்சோக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரூ.7,000 பட்ஜெட்டில் பிரீமியம் குவாலிட்டி கிடைக்காது. இருப்பினும், ஆண்ட்ராய்டு ஓஎஸ், ஓடிடி ஆப்கள், ஆட்டோ ஸ்கிரீன் அலைன்மெண்ட் போன்ற முக்கிய பீச்சர்களை இந்த டெக்சோக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் மாடல் கொடுத்துள்ளது. அதேபோல 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுத்து, எங்கு எடுத்து சென்றாலும், உடனடியாக ப்ரொஜெக்சன் செய்யும் இருக்கிறது.

இந்த மாடலில் ப்ரீஸ்டைல் பிராக்கெட் (Freestyle Bracket) டிசைன் கிடைக்கிறது. எளிதாக மவுண்ட் செய்யும்படி இருக்கிறது. ஆகவே, டேபிள், சீலிங் போன்றவற்றில் எளிதாக வைத்து பயன்படுத்தலாம். இந்த பட்ஜெட்டுக்கு 720p நேட்டிவ் ரெசொலூஷன் மட்டுமே எதிர்பார்க்க முடியும். இருப்பினும், 4K டீகோடிங் சப்போர்ட்டும் இந்த டெக்சோக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் மாடலில் கிடைக்கிறது.
டெக்சோக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் அம்சங்கள் (TecSox Aura Projector Specifications): இந்த டெக்சோக்ஸ் மாடலில் 36 இன்ச் முதல் 200 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 1280 x 720 பிக்சல்களுடன் எச்டி (HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. 200 ஏஎன்எஸ் லூமென்ஸ் (ANSI Lumens) கிடைக்கிறது. ஆகவே, பிரைட்னஸ் பக்காவாகவே இருக்கும். ஆண்ட்ராய்டு 12.0 (Android 12.0) கிடைக்கிறது.
மேலும், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த அடிமட்ட விலையிலும் 30,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப் கொடுக்கிறது. 720p நேட்டிவ் ரெசொலூஷனில் வீடியோ அவுட்புட் கிடைக்கும். மேலும், ஆட்டோ அலைன்மெண்ட் (Auto Alignment) மற்றும் 4K டீகோடிங் (4K Decoding) சப்போர்ட் கிடைக்கும். ஆண்ட்ராய்டு ஓஎஸ் கிடைப்பதால், கனெக்டிவிட்டி பக்காவாக உள்ளது.
அதாவது, மொபைலுடன் கனெக்ட் செய்யும்போது, ஸ்கிரீன் மிரரிங், ஆடியோ ஷேரிங் பக்காவாக இருக்கும். அதேபோல ஆண்ட்ராய்டு ஓஎஸ் வழியாக நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) போன்ற ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டிலும் ஸ்மார்ட் பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது.
ஆகவே, ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Auto Screen Alignment) மற்றும் இன்ஸ்டன்ட் ஆட்டோபோகஸ் (Instant Autofocus) கிடைக்கிறது. ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டூயல்-பேண்ட் வை-பை 6 (Dual-Band Wi-Fi 6) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி (USB) போர்ட் உள்ளது.
அதேபோல எச்டிஎம்ஐ (HDMI) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல், ஐஓஎஸ் டிவைஸ்களிலும் இதை கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த டெக்சோக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் மாடலுக்கு பேட்டரி சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், அதை கூடுதலாக கஸ்டமர்கள் வாங்கி கொள்ள வேண்டும். இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ப்ரொஜெக்டரின் எம்ஆர்பி விலை ரூ.8,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.6,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் டெக்சோக்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த விலைக்கு பீச்சர்கள் போதுமானதாகவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








