'இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம்': 23 வயதில் இறந்த பிரபல Youtuber!

|

யூடியூப்பில் அதிக ரசிகர்களைக் கொண்டிருந்த பிரபல யூடியூபர் டெக்னோப்ளேட் மரணமடைந்தார் என்பதை அவரின் தந்தை வீடியோவின் மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் தங்களை இரங்கலையும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல யூடியூபர் டெக்னோப்ளேட்

பிரபல யூடியூபர் டெக்னோப்ளேட்

பிரபல யூடியூபர் டெக்னோப்ளேட் இறந்துவிட்டதாக அவரின் தந்தை வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் தங்களை இரங்கலையும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். Minecraft விளையாட்டை விளையாடி தனது தனித்துவமான வர்ணனை உடன் வீடியோவாக வெளியிட்டு மிகவும் பிரபலமடைந்தவர்.

Minecraft விளையாடுக்கு தனித்துவமான வர்ணனை

Minecraft விளையாடுக்கு தனித்துவமான வர்ணனை

யூடியூப்பில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் டெக்னோப்ளேட். இவர் Minecraft விளையாடும் வீடியோக்களில் தனித்துவமாக வர்ணனை வழங்கி அதிகளவு பிரபலமடைந்தார். இந்த நிலையில் டெக்னோப்ளேடின் தந்தை தனது மகனின் யூடியூப் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது மகனின் மரணம் குறித்து அறிவித்தார்.

டெக்னோப்ளேட் தந்தை வெளியிட்ட வீடியோ

டெக்னோப்ளேட் தந்தை வெளியிட்ட வீடியோ

டெக்னோப்ளேட் இன் உண்மையான பெயர் அலெக்ஸ். இவரது டெக்னோப்ளேட் யூடியூப் கணக்கில் 12 மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இவர் தன்னை டெக்னோப்ளேட் என்றே வீடியோவில் குறிப்பிட்டுக் கொள்வார். இவரது வர்ணனைகள் கேமிங் பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்தான் டெக்னோப்ளேட் யூடியூப் கணக்கில் அவரது தந்தை தனது மகன் (டெக்னோப்ளேட்) இறந்துவிட்டதாக அறிவித்தார். மேலும் டெக்னோப்ளேட் இறப்பதற்கு முன்பாக தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வீடியோவில் டெக்னோப்ளேட் எழுதிய கடிதத்தை அவரது தந்தை வாசித்துக் காட்டினார்.

டெக்னோப்ளேட் யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோ

டெக்னோப்ளேட் யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோ

டெக்னோப்ளேடின் யூடியூப் கணக்கில் "மிக நீண்ட மேதாவிகள்" என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. வழக்கமாக டெக்னோப்ளேட் யூடியூப் கணக்கில் பதிவேற்றப்படும் வீடியோவில் இருந்து இது வித்தியாசமாக இருந்தது. இது அந்த யூடியூப் கணக்கின் சந்தாதாரர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த வீடியோவில் தோன்றிய ஒருவர், தான் டெக்னோப்ளேடின் தந்தை என உரையை தொடங்குகிறார். வைட் பேக்ரவுண்டில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் ஒரு நாயக்குட்டியுடன் அவர் தனது உரையை தொடங்குகிறார். அதில் அவர் கூறிய தகவலை பார்க்கலாம்.

நீங்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இறந்துவிட்டேன்

நீங்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இறந்துவிட்டேன்

தன்னை டெக்னோப்ளேடின் தந்தை என அறிமுகப்படுத்திய பிறகு, அவர் தனது மகன் டெக்னோப்ளேட் எழுதிய கடிதத்தை படித்துக் காட்டினார். அதில் "எல்லோருக்கும் வணக்கம். டெக்னோபிளேட் இது. நீங்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இறந்துவிட்டேன்" என எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் "Tecnoblade Out" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. டெக்னோப்ளேடின் உண்மையான பெயர் அலெக்ஸ் என்றும், அதை அவர் ஆன்லைனில் பயன்படுத்தவில்லை என்றும் அவரது தந்தை கடிதத்தை படிக்கும் போது குறிப்பிட்டார்.

நூறு உயிர்கள் இருந்தால் இதைதான் செய்வேன்

நூறு உயிர்கள் இருந்தால் இதைதான் செய்வேன்

மேலும் டெக்னோப்ளேட் (அலெக்ஸ்) கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்களை பார்க்கலாம். "எனக்கு நூறு உயிர்கள் இருந்தால், ஒவ்வொரு முறையும் டெக்னோப்ளேடாக பிறக்கத் தான் நினைக்கிறேன். என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் அவை" என கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. கடிதத்தை எழுதி முடித்த 8 மணி நேரத்தில் அலெக்ஸ் இறந்துவிட்டதாக அவரது தந்தை குறிப்பிட்டார். 23 வயதே ஆன டெக்னோப்ளேட் (அலெக்ஸ்) புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அலெக்ஸ் தாயார் தெரிவித்த கருத்துகள்

அலெக்ஸ் தாயார் தெரிவித்த கருத்துகள்

இதுவரை முகத்தை காட்டாமல் குரல் வர்ணனை மூலமான வீடியோவில் தான் இவ்வளவு ரசிகர்களையும் டெக்னோப்ளேட் பெற்றுள்ளார். ஆனால் தற்போதைய வீடியோவில் அவரது தந்தை டெக்னோப்ளேட் (அலெக்ஸ்) புகைப்படத்தை காட்டினார். வீடியோவின் முடிவில் அலெக்ஸின் தாய் பேசுகிறார். ஆனால் அவர் கேமரா முன் வரவில்லை மற்றும் அவரது பெயரை வெளிப்படுத்தவில்லை. அந்த வீடியோவில் அலெக்ஸ் தாயார் பேசிய கருத்துகளை பார்க்கலாம்.

பொழுதுபோக்கு மற்றும் சிரிப்பு தான் நோக்கம்

பொழுதுபோக்கு மற்றும் சிரிப்பு தான் நோக்கம்

"அலெக்ஸ் தனிப்பட்ட புகழை விரும்பியதில்லை. டெக்னோப்ளேடின் ஆரம்பகால ஆன்லைன் நாட்களில் இருந்து தனது பார்வையாளர்களை மகிழ்விப்பதற்கும், வெகுமதி அளிப்பதற்கும், ஆன்லைன் பரிசுகளை வழங்குவதற்கும், நல்ல விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்குமான முயற்சியை மேற்கொண்டார். அனைத்தும் மேலாக அலெக்ஸ், பொழுதுபோக்கு மற்றும் சிரிப்பிற்காக தனது Minecraft சாகசங்களை வழிகளாக வகுத்துக் கொண்டார்" என அவரது தாயார் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Tecnoblade Out: Famous Minecraft Youtuber Dies From Cancer at age 23

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X