Home
News

வெறும் ரூ.7,200 விலையில் ஐபோன் லுக்.. ஐபோனில் உள்ள 'அந்த' அம்சம் இந்த கம்மி விலை போனில் உள்ளது..

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) ஸ்மார்ட்போன் சமீபத்தில் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் அந்தந்த பகுதிகளில் உள்ள நிறுவனத்தின் இணையதளத்தில் சைலெண்டாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட (Tecno Spark Go 2023) வெற்றியடைகிறது. இது கடந்த 2023 ஆண்டில் வெளியிடப்பட்ட மாடல் ஆகும். இது குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ A22 (MediaTek Helio A22) சிப்செட் உடன் வருகிறது. இது 10W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வந்தது.

வெறும் ரூ.7,200 விலையில் ஐபோன் லுக்.. ஐபோனில் உள்ள 'அந்த' அம்சம் ..

புதிய 2024 ஆம் ஆண்டு மாடல் ஒரே மாதிரியான பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், இந்த சாதனம் யுனிசாக் T606 சிப்செட் (Unisoc T606 Chipset) பொருத்தப்பட்டுள்ளது. இது இப்போது நான்கு வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் முழு விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 சிறப்பம்சம் (Tecno Spark Go 2024 specifications):
டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) ஆனது 6.6' இன்ச் கொண்ட HD+ உடைய 1,612 x 720 பிக்சல்கள் கொண்ட LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் டைனமிக் போர்ட் அம்சத்துடன் உள்ளது. இது டிஸ்பிளேவின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள டைனமிக் போர்ட் என்பது ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் மூலம் ஈர்க்கப்பட்ட டேப்லெட் ஷேப் பாப்-அப் அனிமேஷன் ஆகும்.

இதன் ஹார்டுவேர் அம்சத்தை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) ஆனது யுனிசாக் டி606 (UniSoC T606 SoC) உடன் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4GB RAM உடன் வருகிறது. இது 8GB ரேம் வரை எக்ஸ்பென்ட் செய்ய கூடிய அம்சத்தை ஆதரிக்கிறது. மைக்ரோSD வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் இன்டெர்னல் ஆக 128GB வரை உள்ளடங்கிய ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு டி-கோ எடிஷன் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. கேமரா பற்றி பேசுகையில், இது 13 மெகாபிக்சல் பிரைமரி பின்புற கேமரா மற்றும் குறிப்பிடப்படாத AI-கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்பிளேயின் மேற்புறத்தில் மையமாக சீரமைக்கப்பட்ட பன்ச்-ஹோல் ஸ்லாட்டில் 8 மெகாபிக்சல் சென்சார் வைக்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) ஆனது 10W வயர்டு சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது USB Type-C போர்ட்டைப் பெறுகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது. இது டூயல் சிம்-ஆதரவுடன் வருகிறது. இந்த போனில் 4G, WiFi, புளூடூத் மற்றும் GPS இணைப்பு ஆகியவை உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2023 விலை (Tecno Spark Go 2024 price):
இந்த ஸ்மார்ட்போன் அல்பேன்க்ளோவ் கோல்டு (Alpenglow Gold), க்ராவிட்டி பிளாக் (Gravity Black), மேஜிக் ஸ்கின் (Magic Skin) மற்றும் மிஸ்டரி வைட் (Mystery White) வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஃபோன் மலேசியாவில் விலை RM 399-க்கு விற்பனைக்கு வருகிறது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 7,200 மட்டுமே. இந்த விலை 4ஜிபி + 128ஜிபி வேரியண்ட் மாடலுக்கு உரியது.

பிலிப்பைன்ஸில் இதே விருப்பம் பட்டியலிடப்பட்டுள்ளது. இது PHP 3,899 விலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 5,900 விலையில் வருகிறது. இது நவம்பர் 20 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணி வரை சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படும். இந்த ஃபோன் நவம்பர் 25 ஆம் தேதி பிலிப்பைன்ஸில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் களமிறங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 2024 with iPhone like Island Display Launched Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X