மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த 'அந்த' விற்பனை.! Tecno Spark 9T மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வம்?

|

ஒட்டுமொத்த இந்தியாவும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்காகத் தான் காத்துக்கிடக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் அது தான் உண்மை. Tecno Spark 9T என்ற இந்த புதிய ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை நாளை முதல் லைவ் செய்யப்படுகிறது. ஏன் மக்கள் இந்த விற்பனைக்காகக் காத்துக்கிடக்கின்றனர்? அப்படி, இந்த ஸ்மார்ட்போனில் என்ன இருக்கிறது? என்ற பல கேள்விகளுக்கான விடையை இப்போது பார்க்கலாம் வாங்க.

புதிய Tecno Spark 9T விற்பனைக்காக மக்கள் காத்திருக்கின்றனரா?

புதிய Tecno Spark 9T விற்பனைக்காக மக்கள் காத்திருக்கின்றனரா?

இந்தியாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி (நாளை) 12:00 am முதல், இ-காமர்ஸ் தளமான அமேசான் வழியாக இந்த புதிய Tecno Spark 9T ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்க உள்ளது. டெக்னோ நிறுவனத்தின் இந்த புதிய Tecno Spark 9T ஸ்மார்ட்போன் மாடல் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. அன்றிலிருந்து இன்று வரை மக்கள் இந்த போனின் விற்பனைக்காகக் காத்திருக்கின்றனர்.

இவ்வளவு எதிர்பார்ப்பிற்கு காரணம் என்ன?

இவ்வளவு எதிர்பார்ப்பிற்கு காரணம் என்ன?

காரணம், இது மலிவு விலையில் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, Tecno Spark 9T சாதனம் 6.6' இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 7ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் உடன் இயங்குகிறது. இது 50 மெகாபிக்சல் கொண்ட AI டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது. இதில் 5000mah பேட்டரியை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் நைஜீரியாவில் வித்தியாசமான சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

Tecno Spark 9T டிவைஸின் விலை, விற்பனை மற்றும் சலுகை விபரங்கள்

Tecno Spark 9T டிவைஸின் விலை, விற்பனை மற்றும் சலுகை விபரங்கள்

இந்தியாவில் இந்த Tecno Spark 9T ஸ்மார்ட்போன் சற்று வித்தியாசமான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், உங்கள் காசுக்கேற்ற கரெக்ட்டான ஸ்மார்ட்போன் சாதனம் இது தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த Tecno Spark 9T டிவைஸின் விலை, விற்பனைமற்றும் சலுகை விபரங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னாள் இந்த சாதனத்தில் இருக்கும் சிறப்பான விஷயங்களைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!

Tecno Spark 9T சிறப்பம்சம்

Tecno Spark 9T சிறப்பம்சம்

Tecno Spark 9T ஸ்மார்ட்போன் டிவைஸ் இந்தியாவில் 6.6' இன்ச் கொண்ட முழு HD+ உடைய 1,080 x 2,408 பிக்சல்கள் கொண்ட டாட்-நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90.1 சதவிகித பாடி-டு-டிஸ்பிளே விகிதத்தைக் கொண்டுள்ளது. இது 401ppi பிரைட்னஸை வழங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் ஹைப்பர் இன்ஜின் தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Tecno Spark 9T ஸ்மார்ட்போன் ஆனது 4GB LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Tecno Spark 9T ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கிடைக்குமா?

Tecno Spark 9T ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கிடைக்குமா?

அதேபோல், இந்த புதிய Tecno Spark 9T ஸ்மார்ட்போன் டிவைஸ் மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 3ஜிபி ஸ்டோரேஜை கடனாகப் பெற்று அதை ரேமாகப் (RAM) பயன்படுத்துகிறது. இதன் மூலம் உங்களுக்கு 7ஜிபி ரேம் வரை கிடைக்கும். இந்த Tecno Spark 9T ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ) உடன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு HiOS 7.6 இயங்குதளத்தில் இயக்குகிறது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

Tecno Spark 9T டிவைஸ் கேமரா விபரம்

Tecno Spark 9T டிவைஸ் கேமரா விபரம்

கேமரா அம்சத்தைப் பொறுத்த வரை, Tecno Spark 9T டிவைஸ் f/1.6 உடன் PDAF அம்சம் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மூலம் இயங்கும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. AI சென்சாருடன் 2 மெகாபிக்சல் சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான புகைப்படங்களைக் கிளிக் செய்ய உதவும் சூப்பர் நைட் மோடு உடன் இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் டூயல் ஃபிரண்ட் பிளாஷ் லைட்டைக் கொண்டுள்ளது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் பேட்டரி

18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் 9T ஆனது 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன், பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக போனின் ஸ்டோரேஜை 512ஜிபி வரை நீடிக்க அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களைப் பற்றிப் பேசுகையில், இது Wi-Fi, ப்ளூடூத் v5.0, GPS, GNSS, Galileo, Beidou மற்றும் QZSS ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த டிவைஸின் விலையைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்தியாவில் Tecno Spark 9T விலை

இந்தியாவில் Tecno Spark 9T விலை

Tecno Spark 9T இந்தியாவில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெறும் ரூ. 9,299 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் வேறு எந்த ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களும் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. இது ஒரு ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாகும். இந்த விலை நிறுவனத்தின் அறிமுக கால சிறப்பு விற்பனை விலை என்பதை மறக்காதீர்கள். இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 12 மணி முதல் அமேசான் வழியாக விற்பனைக்கு வாங்கக் கிடைக்கும்.

காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?

Tecno Spark 9T சலுகை விபரம்

Tecno Spark 9T சலுகை விபரம்

சலுகைகளைப் பற்றி பேசுகையில், அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை நெருங்குவதால், இதன் ஒரு பகுதியாக SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு, 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல், டெக்னோ ஸ்பார்க் 9டி வினாடி வினா போட்டியில் பங்கு பெரும் பயனர்களுக்கு ரூ. 500 அமேசான் பே பேலன்ஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையை நழுவ விடாதீர்கள். Tecno Spark 9T அட்லாண்டிக் ப்ளூ மற்றும் டர்க்கைஸ் சியான் நிறங்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 9T to Go on Sale in India at 12am on August 6

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X