இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!

|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன டெக்னோ மொபைல் (Tecno Mobile) நிறுவனத்தை, இந்திய மொபைல் போன் உற்பத்தியாளர்களான லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் உடன் ஒப்பிடுவதில் பெரிய தவறொன்றும் இல்லை.

ஏனெனில் இந்த மூன்று நிறுவனங்களுமே "தரமான" பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கில்லாடிகள்!

இருந்தாலும்...?

இருந்தாலும்...?

என்னதான் நல்ல-நல்ல பட்ஜெட் போன்களை அறிமுகம் செய்தாலும் கூட இருப்பினும் லாவாவும், மைக்ரோமேக்ஸும் இந்திய பிராண்டுகள் என்பதால் அவைகள் பெரிதும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

போதாக்குறைக்கு சாம்சங் மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்களும் ரூ,10,000 - ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அட்டகாசமான சில மாடல்களை தன்வசம் கொண்டுள்ளதால் லாவா மற்றும் மைக்ரோமேக்ஸின் மொபைல் போன்கள் புறக்கணிக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!

ஆனால் டெக்னோவின்

ஆனால் டெக்னோவின் "தந்திரம்" நன்றாக வேலை செய்கிறது!

இந்திய பிராண்டுகளை போலவே தானும் ஒதுக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய டெக்னோ மொபைல் நிறுவனம், தன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் "விலையை மீறிய அம்சங்களையும்" மற்றும் "பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் போன்களுக்கு இணையான வடிவமைப்பையும்" சேரக்க தொடங்கியது.

ஒருகட்டத்தில் டெக்னோ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஆனது, சாம்சங் மற்றும் ரியல்மியின் பட்ஜெட் மாடல்களை தூக்கி சாப்பிடும் ரேன்ஞ்சிற்கு வளர்ந்தன.

"அந்த வரிசையின் கீழ்" லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒரு டெக்னோ ஸ்மார்ட்போனின் இந்திய வருகையானது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது Tecno Spark 9T ஆகும்!

அது Tecno Spark 9T ஆகும்!

டெக்னோ ஸ்பார்க் 9டி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் ஆனது, பிரபல இகாமர்ஸ் வலைதளமான அமேசான் இந்தியா வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coming Soon என்கிற டெக்னோ ஸ்பார்க் 9டி ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் தற்போது அமேசானில் 'லைவ்' ஆகி உள்ளது. ஆக இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இருப்பினும், அமேசானின் குறிப்பிட்ட லேண்டிங் பேஜ் ஆனது ஸ்பார்க் 9டி-யின் சரியான வெளியீட்டு தேதியை வெளிப்படுத்தவில்லை, ஆனால் சில முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளது.

பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!

அது என்னென்ன அம்சங்கள்?

அது என்னென்ன அம்சங்கள்?

அமேசான் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இது ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன் உடனான 6.6-இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மேலும் இதன் டிஸ்பிளேவில் வாட்டர்-டிராப் ஸ்டைல் ​​நாட்ச் இடம்பெறுவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தவிர்த்து, ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வதற்கான ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.

நினைவூட்டும் வண்ணம் Tecno Spark 9T ஆனது கடந்த ஜூன் மாதம் நைஜீரியாவில் - நான்கு கலர் ஆப்ஷன்களின் கீழ் - அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆக இந்தியாவில் Tecno Spark 9T விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

ஆக இந்தியாவில் Tecno Spark 9T விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

முன்னரே குறிப்பிட்டபடி, டெக்னோ ஸ்பார்க் 9டி-யின் அமேசான் லேண்டிங் பேஜ் ஆனது "விரைவில் வரும்" என்பதை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, டெக்னோ நிறுவனமோ அல்லது அமேசானோ, ஸ்பார்க் 9டி மாடலின் அதிகாரப்பூர்வமாக விலையை அறிவிக்கவில்லை.

இருப்பினும், இது ஏற்கனவே நைஜீரியாவில் அறிமுகமாகி விட்டது என்பதால், இதன் தோராயமான இந்திய விலை நிர்ணயத்தை நம்மால் யூகிக்க முடியும்.

Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

நைஜீரிய விலை விவரங்கள்:

நைஜீரிய விலை விவரங்கள்:

நைஜீரியாவில் டெக்னோ ஸ்பார்க் 9டி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.14,700 க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.16,500 க்கும் அறிமுகமாகி உள்ளது.

இதேபோன்ற விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். மேலும் இது அட்லாண்டிக் ப்ளூ, கோகோ கோல்ட், ஐரிஸ் பர்பில் மற்றும் டர்க்கைஸ் சியான் என்கிற 4 வண்ண விருப்பங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Spark 9T இல் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Spark 9T இல் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

முன்னரே குறிப்பிட்டபடி - அமேசான் லேண்டிங் பேஜின் படி - டெக்னோ ஸ்பார்க் 9T ஆனது, புல்-எச்டி+ ரெசல்யூஷன் உடனான 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை பேக் செய்யும். இதன் செல்பீ கேமராவானது வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச்சில் உட்பொதிக்கப்படும்.

இது MediaTek Helio G35 SoC உடனாக 4ஜிபி அளவிலான "வழக்கமான" மற்றும் 3GB அளவிலான "விர்ச்சுவல் ரேம்" உடன் இணைக்கப்படும்.

வரவிருக்கும் டெக்னோ ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் பேக் செய்யும். நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும்.

இனி இனி "பத்தல பத்தல"னு சொல்ல முடியாது; நியாயமான விலையில் உலகின் முதல் 200W போன்!

கேமரா செட்டப் எப்படி இருக்கும்?

கேமரா செட்டப் எப்படி இருக்கும்?

இங்கே தான் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. ஏனெனில் அமேசான் வழியாக வெளியான தகவல், இது எல்இடி ப்ளாஷ் உடன் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்கிறது.

இந்த தகவல் டெக்னோ ஸ்பார்க் 9டி ஸ்மார்ட்போனின் நைஜீரிய வேரியண்ட்டில் இருந்து வேறுபட்டதாக தெரிகிறது. ஏனெனில் நைஜீரியாவில் இது 13 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் MediaTek Helio G85 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ஸ்பார்க் 9டி மாடலின் இந்திய வேரியண்ட் ஆனது "அப்படியே" நைஜீரிய வேரியண்ட்டை போலவே இருக்காது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

டெக்னோ ஸ்பார்க் 9டி குறித்துவேறு ஏதேனும் தகவல் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Photo Courtesy: Amazon India, Tecno

Best Mobiles in India

English summary
Tecno Spark 9T India launch Confirmed by Amazon Check Expected Specifications Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X