Home
News

பலே பலே இப்படி ஒன்றை தான் எதிர்பார்த்தோம்.. மலிவு விலையில் வெளிவந்த Tecno Spark 8C.. விலை இது தானா?

உலகளாவிய மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டான டெக்னோ நிறுவனம் இப்போது அதன் வரிசையில் புதிய ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ நிறுவனம் தற்பொழுது டெக்னோ ஸ்பார்க் 8சி (Tecno Spark 8C) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்னோ நிறுவனம் இந்த சாதனத்தை பிரீமியம் நுழைவு நிலை சலுகையாகச் சந்தைப்படுத்த எதிர்பார்க்கிறது. முன்னர் நாம் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்த விலையில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் கவனத்தை ஈர்க்கும் புதிய Tecno Spark 8C ஸ்மார்ட்போன்

மக்கள் கவனத்தை ஈர்க்கும் புதிய Tecno Spark 8C ஸ்மார்ட்போன்

டெக்னோ நிறுவனத்தின் புதிய Tecno Spark 8C ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Tecno Spark 8C ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் சிப்செட் அம்சத்துடன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவைக் கொண்ட டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் சிறப்பம்சமாக இதன் விலை உள்ளது. இதன் விலையைப் பற்றி மேலும் பேசுவதற்கு முன், ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகளை பற்றி முதலில் பார்ப்போம்.

Tecno Spark 8C சிறப்பம்சம்

Tecno Spark 8C சிறப்பம்சம்

Tecno Spark 8C ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.6' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் DoT நாட்ச் டிஸ்ப்ளேவுடன் 89.3% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ அளவை கொண்டுள்ளது. இந்த Tecno Spark 8C ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz டச் சாம்லிங் ரேட் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாதனத்தின் டிஸ்ப்ளே வழங்கக்கூடிய அதிகபட்ச பிரகாசம் 480 நிட்ஸ் ஆகும். இது இன்று கிடைக்கும் இடைப்பட்ட சாதனங்களுடன் வழங்கக் கூடிய டிஸ்பிளேவுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை. ஆனால், இது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Tecno Spark 8C ஸ்டோரேஜ் அம்சம்

Tecno Spark 8C ஸ்டோரேஜ் அம்சம்

நுழைவு நிலை மலிவு விலை கொண்ட ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு டிஸ்பிளே கிடைப்பது சிறந்த விஷயம் தான். இந்த Tecno Spark 8C சாதனம் ஆக்டா கோர் சிப்செட் AnTuTu ஸ்கோர் 144753 உடன் இணைந்து 3GB வரை ஃபிசிக்கல் ரேம் அம்சத்தை கொண்டுள்ளது. இது 3ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் 6 ஜிபி ரேம் வரை விரிவாக்கக் கூடிய விருப்பத்துடன் வருகிறது. மெய்நிகர் ரேம் அம்சத்திற்கான ஆதரவு எதிர்கால OTA (ஓவர்-தி-ஏர்) புதுப்பிப்புடன் வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனம் 64ஜிபி வரை உள்ளக சேமிப்பகத்துடன் வருகிறது. எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜிற்கு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் வழங்குகிறது.

Tecno Spark 8C ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

Tecno Spark 8C ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

Tecno Spark 8C ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், இந்த சாதனம் 13 எம்பி AI சென்சார் மற்றும் பல்வேறு புகைப்பட முறைகளுக்கான ஆதரவுடன் ஒரு இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பைக் கிளிக் செய்வதற்குச் சாதனத்தின் முன்பக்கத்தில் 8 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. Tecno Spark 8C ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5000 mAh இன்பில்ட் பேட்டரி மூலம் இயங்குகிறது. இது 89 நாட்கள் வரை ஸ்டாண்ட்பை நேரத்தை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

Tecno Spark 8C ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்கள்

Tecno Spark 8C ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்கள்

இதர அம்சங்கள் பற்றி பார்க்கையில், இந்த புதிய Tecno Spark 8C ஸ்மார்ட்போன் ஆனது 4G LTE இணைப்புடன் இயங்குகிறது. இத்துடன் இந்த நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூடூத், Wi-Fi இணைப்புகளை ஆதரிக்கும் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆதரிக்கும் அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணமே, இதன் விலை தான் என்று முன்பே கூறி இருந்தோம். பல அற்புதமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களைப் பார்க்கலாம்.

Tecno Spark 8C விலை மற்றும் விற்பனை விபரம்

Tecno Spark 8C விலை மற்றும் விற்பனை விபரம்

புதிய Tecno Spark 8C ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் கூடிய ஒற்றை வேரியண்ட் மாடல் விருப்பத்துடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Tecno Spark 8C ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை அறிமுகம் சலுகையுடன் வெறும் ரூ. 7499 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது அமேசான் இந்தியாவில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ஐரிஸ் பர்பில், மேக்னட் பிளாக், டர்க்கைஸ் சியான் மற்றும் டயமன் கிரே உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

யாருக்கெல்லாம் இந்த சாதனம் சிறப்பான சாய்ஸ் ஆகும்?

யாருக்கெல்லாம் இந்த சாதனம் சிறப்பான சாய்ஸ் ஆகும்?

பட்ஜெட் விலை அல்லது அதை விட மிக குறைந்த விலையில் போதுமான சிறந்த அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Tecno Spark 8C ஸ்மார்ட்போன் சிறந்த சாய்ஸ் ஆகும். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனைத் தேடும் பயனர்களுக்கு டெக்னோ ஸ்பார்க் 8சி சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆரம்பக் கால சலுகை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது சரியாக தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Tecno Spark 8C With Dual Rear Cameras Launched in India Know The Price And Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X