ரூ.15000 விலையில் அறிமுகமா?- 6.6 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பு ஆதரவோடு டெக்னோ ஸ்பார்க் 8சி!
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான டெக்னோ நிறுவனம், டெக்னோ ஸ்பார்க் 8சி என்ற மற்றொரு ஸ்மார்ட்போனை கொண்டு வந்திருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ 8சி என்ற ஸ்மார்ட்போனின் வாரிசாக இது இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களை பார்க்கலாம். இது டிஎஸ் ஒலி அமைப்பு, வாட்டர் டிராப் ஸ்டைல், ஷோ ஸ்கோர் மற்றும் என்எஃப்சி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்பார்க் 8 தொடரின் கீழ் வரும் ஐந்தாவது பிராண்டாக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்பார்க் 8பி, 8 ப்ரோ மற்றும் ஸ்பார்க் 8டி ஆகிய சாதனத்தின் வாரிசான ஸ்பார்க் 8ஐ சாதனத்தை செப்டம்பர் 2021-ல் நிறுவனம் அறிவித்தது.

டெக்னோ ஸ்பார்க் 8சி விவரக்குறிப்புகள்
டெக்னோ ஸ்பார்க் 8சி சாதனத்தின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிராந்திய வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எச்டி ப்ளஸ் (7201 x 612 பிக்சல்) டாட் நாட்ச் டிஸ்ப்ளே உடன் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ-ல் ஹை ஓஎஸ் லேயர்களுடன் இயங்குகிறது.

ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள்
டெக்னோ ஸ்பார்க் 8சி சாதனத்தின் செயலி குறித்த விவரம் இணையதளத்தில் பட்டியலிடப்படவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் யூனிசோக் டி606 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கையில், டெக்னோ நைஜீரியா இணையதளத்தில் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் டெக்னோ தாய்லாந்து இணையதளத்தில் 4 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது.

13 எம்பி பிரைமரி கேமரா
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனானது 13 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகிய வசதியுடன் கூடிய இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 8 எம்பி செல்பி கேமரா வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிடிஎஸ் ஸ்டீரியோ சவுண்ட், வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச், டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் மற்றும் என்எஃப்சி இணைப்பு ஆகியவைகளுடன் வரும் என கூறப்படுகிறது. 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, என்எஃப்சி மற்றும் யூஎஸ்பி போர்ட் வசதியை கொண்டிருக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
டெக்னோ ஸ்பார்க் 8சி ஆனது பொக்கே எஃபெக்ட், ஏஐ காட்சி அமைப்பு, பனோரமா, எச்டிஆர் பயன்முறை, ஏஆர் ஸ்டிக்கர் மற்றும் 1080 பிக்சல் டைம் லேப்ஸ் புகைப்பட ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டிருக்கும் எனவும் இதை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் 8சி விலை மற்றும் விவரக்குறிப்புகள்
இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தாய்லாந்து மற்றும் நைஜீரியா தளங்களில் பட்டியலிடப்பட்ட போதிலும், டெக்னோ ஸ்பார்க் 8சி ஆனது ரூ.15,000 என்ற விலைப் பிரிவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டைமண்ட் க்ரே, ஐரிஸ் பர்பிள், மேக்னட் பிளாக் மற்றும் டர்க்கைஸ் சியான் ஆகிய வண்ண விருப்பங்கள் வரும் என கூறப்படுகிறது. டெக்னோ 8 சீரஸ் ஸ்மார்ட்போன்கள் பொதுவாகவே பட்ஜெட் விலைப் பிரிவுகளில் இலக்காக வைத்து அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனானது ரூ.7999-க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications